பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா

  • விரைவில் களைப் படைந்து போகின்ற உடல் நிலையை மாற்றி, அதிக சக்தியையும் , ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் தருகின்றது.
  • இரத்த சோகையைப் போக்கி, இரத்த ஓட்டத்தைப்

பெருக்கி, வளமான உடலைத் தருகிறது.

  • அடிக்கடி வருகின்ற தலைவலியை நீக்குகிறது.
  • இத்தனைக்கும் மேலாக, எடுப்பும் சிறப்பும் மிகுந்த உடலமைப்பைத் தந்து, வாழ்வை இன்பமாக

அனுபவிக்கத் தூண்டுகிறது.

  • நல்ல உடலில் நல்ல மனம் என்பார்கள். அந்த நல்ல மனம் நிறையப் பெற்று, இயற்கைாகவே இனிய பண்பும் , அன்பும் கொண்டு, குடும்பத்திலும், சுற்றத்தாருடனும் கலந்துறவாட பாராட் டுப் பெறுகின்ற இனிய சூழ்நிலையை உருவாக்குகிறது. மேலே கூறிய அனைத்தும், பயிற்சியை மேற் கொண்ட பெண்கள் அடைந்த பயன்களாகும். அனுபவ பூர்வமாகக் கண்டு கொண்டு அத்தகைய அரிய பயன்களை, அனைவரும் பெற்ற அற்புத சக்தியினை, நீங்களும் வாழ்வில் நிதமும் பெற்றுப் பரிபூரண நிறை வாழ்வு வாழ வேண்டுமென்று அழைக்கிறோம்.