பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 5 பெண்களும் பேரழகு பெறலாம் (5) பயிற்சியும் உணவும்: காலையில் பயிற்சி செய்ய வேண்டும் என்றால், காலை கடன்களை முடித்துவிட்டு வெறும் வயிற்றுடன் பயிற்சிகளைத் தொடர்வது நல்லது. பயிற்சி முடிந்த பிறகு நீங்கள் விரும்புகின்ற பானத்தைக் குடிக்கலாம். விரும் பிய உணவைச் சாப் பிடலாம். உடல் நிலைக் கேற்றவாறு உணவு முறை அந்தந்த்ப் பகுதியில் தரப் பட்டு இருக்கின்றது. அம் முறையைப் பின்பற்றவும். (6) ஒய்வும் உல்லாசமும்: உடலுக்கு உணவும், உடையும் , காற்றும் பயிற்சியும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் ஒய் வும். ஆலுவலகத்திற் குச் செல்கின்ற சகோதரிகள் பயிற்சி செய்தால் , அலுவலகத்திற் குச் சென்றாலும் சரி, அல்லது வீட்டிலிருப்பவர்களாக இருந்தாலும் சரி, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடமாவது ஒய்வு எடுத்துக் கொள்வது நல்லது. அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்கின்ற வர்கள் அப்படியே நாற்காலியில் உட்கார்ந்திருந்தவாறு நன்றாகப் பின்புறம் சாய்ந்து கொண்டு, நிறைய மூச்சிழுத்துக் கொண்டு ஒய்வு பெறுதல் நல்லது. வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பவர்கள் 5 நிமிடம் படுக்கையிலே படுத்திருந்து ஒய்வு எடுத்துக் கொள்ளலாம். ஒய்வு அடிக்கடி எடுத்துக் கொண்டால் உற்சாகமான நிலையிலே உடல் இருக்கும் பணி யாற்றும் போதும் சுகமிருக்கும். அதற்காக, ஒய்வாகவே இருந்து விடக் கூடாது.