பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா ஆகவே களைப் பு ஏற்படாதவாறு உடலை வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை என்பதை அடிக்கடி நினைவு படுத் திக் கொள்ள வேண்டும். ஒய்வு எடுப்பது சுறுசுறுப்புப் பெறவே. அதிக ஒய்வு சோம்பலை உண்டாக் கிவிடும் என்பதையும் மறந்து விடாதீர்கள். கூன் விழுந்த முதுகுடன் வளைந்தபடி நிற் பதும் நடப்பதும், உட்காருவதும் உள்ளுறுப்புகள் மங்கிப் போகின்றன. செயலாற்று இயலாமலும் போய் விடுகின்றன. அதனால் தான் உடல் களைப் படைந்து விடுகிறது. அந்தக் களைப் பைத் தவிர்க்க, நிற் கையில் , நடக்கையில், உட்காருகையில், எப்போதும் இடுப்பு (Hip) வளையாமல் நிமிர்ந்திருப்பது போன்ற நிமிர்ந்த தன்மையுள்ள உடல் நிலையைக் கடைப் பிடிக்க வேண்டும் இதனால் பல நன்மைகள் உண்டு. எல்லா வகையிலும் தான். (7) பெண்களும் பயிற்சி காலமும்: பயிற்சி செய்ய நேரம் இருப்பதுபோல, பயிற்சி செய்ய ஒரு காலமும் பெண்களுக்கு உண்டு. முடிந்தால் 60 வயது வரை கூட பெண்கள் பயிற்சி செய்யலாம். அது அவரவர் மன நிலையையும் விருப்பத்தையும் உடல் நிலையையும் பொறுத்தது. பெண்களிலே எல்லாப் பருவத்தினரும், எல்லா வயதினரும் பயிற்சி செய்யலாம் என்றாலும், எல்லா