பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா ஒரே மூச்சில் எவ்வளவு காற்றை அதிகம் இழுக் கிறோமோ, அவ்வளவுக்கு இரத்த ஒட்டம் விரைவு பெறும் தேகம் செழுமையும் வனப் பும் பெறும் அழகு மிளிரும். நிமிர்ந்த மார்பு கிடைக்கும். மார்பகங்கள் செழிக்கும். இடை குறுகும், தோலின் நிறம் வண்ணம் பெறும். கண்கள் ஒளியுடன் திகழும். உடலுக்கு நிறைந்த சக்தி கிடைக்கும். ஆகவே, பயிற்சியைச் செய்யும் பொழுது, மூச்சினை இழுத்து வெளிவிடுகின்ற முறையை, சரிவரக் கற்றுக் கொண்டு விட வேண்டும் என்பதை வற்புறுத்தவே, மீண்டும் மீண்டும் எழுதுகின்றோம். மேற்கூறிய பயிற்சிகளில் அனுபவம் பெற்று விட்ட பிறகு, எண்ணிக்கையில் அதிகம் செய்யும் ஆற்றல் வந்து விட்ட பிறகு, இயல்பான தோற்றம் உள்ளவர்கள் அனைவரும் எடுப்பான மிடுக்கான தோற்றமும் மாட்சியும் பெற பத்துப் பயிற்சிகளைக் கீழே தந்திருக்கிறோம். ஆகவே, அவற்றை கவனத்துடன் கருத்துடனும் தொடர்ந்து செய்யவேண்டும். பயிற்சிக்குரிய சொல்லும் விளக்கமும் 1. Quusi Lurren stöpai: (Stand Erect) குதிகால் இரண்டும் இனைந்திருக்குமாறு சேர்த்து, முன் பாதங்கள் இரண்டும் சுமார் 6 அங்குலம் இடை வெளி இருக்குமாறு விரித்து வைத்து, கைகள் இரண்டும் தொடைகளின் பக்கவாட்டில் இயல்பாகத் தொங்கிக் கொண்டிருக்க, விழிகள் உயரத்திற்கு நேரே இருக்கும் ஒர் பொருளைப் பார்ப்பது போல நேரே பார்த்து, மார்பை நிமிர்த்தி நேராக, விறைப்பாக நிற்றல்.