பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 55 எல்லோராலும் நம்பப்படுகிறது. மார்பகம் சரிவர அமையாதவர்களுக்கு அது ஒரு பெருங்குறையாகவே உள்ளத்தில் இருக்கிறது. அந்தக் குறை தினந்தினம் மனதில் வளர்ந்து கொண்டே வருவது போன்ற ஒரு பிரமையும் அடிக்கடி ஏற்படுவதால் தாழ்வு மனப்பான்மையும் கூடவே வந்து விடுகிறது. ஆகவே, வாழ்வுக்கும் இன்பத்திற்கும், அழகுக்கும் முக்கியமான ஒர் அங்கமாக, மார்பகம் கருதப்படுகிறது. தமிழிலக்கியமாக இருந்தாலும் சரி, மற்ற வேறு மொழி இலக்கியங்களாக இருந்தாலும் சரி, மார்பகத் தைப் பற்றி பெருமை படுத்திக் கூறாத நூல்களே இல்லை என்று கூறலாம். கவிஞர்களுக்கு மார்பகத்தைப் புகழ்வதென்றால், கற்பனையின் எல்லைக்கே போய் விடுவார்கள். ஆகவே, அழகும் எடுப்பும் மிகுந்த மார்பகத்தைத் தமிழிலக்கியங்கள் தனம் என்றும், 'அம்மம்' என்றும் 'சுவர்க்கம் என்றும் கூறுகின்றன. தனம் என்றால் செல்வம். அம் என்றால் அழகு, அம்மம் என்றால் அழகோ அழகு. சுவர்க்கம் என்றால் சொல்லவோ தேவையில்லை! இவ் வளவு பெருமைக்கு உகந்த மார்பகங்கள் எவ்வாறு உருவாக்கப் படுகின்றன என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். திசுக் களால் ஆக்கப் படுகின்றன. அத் தசைகள், பால் மடி சுரப்பிகளின் உதவியால், உருவம், அமைப்பு, உறுதியாக மார் பகங்கள் சிறிய தசைத்