பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

02 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா ஆகவே, உடலில் சில மாற்றங்கள் நிகழத் தான் நிகழ்கின்றன. புது உயிரை, பல மாதங்கள் சுமந்திருந்த தேக மல் லவா! கனம் சுமந்த வயிற் றில் சுருக்கம் இருக்கும். ஆற்றின் அலைபோல மடிப்பு இருக்கும். சிலருக்குத் தசைகள் தொங்கி மடிந்து விழவும் விழும். அந்த நிலையை எப்படி மாற்றுவது? அதற்குரிய ஒரே வழி, உடலழகுப் பயிற்சிகள் தான். தாய்மைப் பேற்றை அடைந்ததும், குழந்தைக்கு பால் கொடுக்கத் தொடங்கியதும், மார்பகம் சரிந்து போகின்றது. அவைகளிலே உள்ள இறுக்கம் (Firmness) குலைந்து போகிறது! ஏன் என்றால் , அது உடலில் நிகழும் ஒரு சில நடைமுறைகளால்தான். தாய்மைப் பேறு இருக்கும் நேரத்தில் , எண் டோகிரைன் சுரப்பிகளுக்கு சரிவர இயக்கமில்லை. உடலுறவு கொள்கின்ற காலத்தில் உணர்ச்சிப் பெருக்குடன் இருக்கும் போது, மார்பகங்கள் இறுக்கம் பெறுகின்றன. காரணம் , அந்த நேரத்தில் பணியாற்றுகின்ற பால் உணர்வு தூண்டும் சுரப்பிகளை எண்டோகிரைன் சுரப்பிகள் இயக்குவதால் தான். பிள்ளைக்குப் பால் கொடுப்பதால் தான் மார்பகம் சரிந்து போகிறது என்று வாதம் செய்வோரும் உண்டு. பால் கொடுப்பதால் மட்டுந் தான் அந்த நிலை வருகிறதா என்றால், பருவம் தவறிப் போனால் கூட, சரிவு ஏற்படுதல் சகஜமே!’ எனவே, பால் கொடுக்கின்ற கீழ்க்காணும் முறையைக் கடை பிடிப்பது மிகவும் சாலச் சிறந்ததாகும். பால் கொடுக்கும் போதும், குழந்தை குடிக்கும் போதும் தாய்க்கு ஏற்படுகின்ற ஒரு வித உணர்வால்,