பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா r பயிற்சி 4 தொப்புள் அளவு உயரத்திலிருப்பது போல ஒரு மேஜை அல்லது உயரமான ஒரு பொருளின் ஒரத்தை, உள்ளங்கைகளால் பிடித்துக் கொள்ளவும். கால்கள் இரண்டும் மூன்றடித் தூரத்திற் குப் பின்புறம் இருக்கு மாறு வைத்து முன்னங்களால் களால் (Toes) நிற்கவும். மூச்சிழுத்துக் கொள்ள வேண்டும். முழங்கைகளை மடித்த, உடலை முன்புறமாகத் தள்ளவும். வயிறு, கைகளை வந்துத் தொடுகின்ற அளவில் முன் செல்லவும். சிறிது நேரம் கழித்து, முன் நிலைக்கு வந்து, மூச்சு விடவும். (10முறை) இதே பயிற்சியில் சிலநாள் பழக்கமும் அனுபவமும் பெற்ற பின், முன்னிருந்த நிலை போல் கைப் பிடி இருக்க, இன்னும் சிறிது தூரம் தள்ளிக் கால்களை வைத் திருந்து, முன் போல் முன்புறமாக உடலைத் தள்ளிப் பயிற்சி செய்யவும். (15 முறை) பயிற்சி 5 இடதுகால் முன்னே இருக்கும் படி நிற்கவும். கைகளை மார்புக்கு முன்புறம் நீட்டிருக்கவும். நன்றாக மூச்சைஇழுத்துக் கொண்டு கைகளைப் பக்கவாட்டில் கொண்டு செல்லவும். சிறிது நேரம் கழித்து முன் நிலைக்கு வரவும். (20 முறை) பயிற்சி 6 இயல்பாக நின்று, கைகள் இருபுறமும் இடுப்பில் இருக்கவும். மூச்சை நன்றாக இழுத்துக் கொள்வும். உடலைப் பின்புறமாக உயர்த்தி (உள்ளங்கைகளை)