பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா - இந்த அமைப்பைத் தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது. பியூபிக் எலும்புகள் இரண்டும் இணையும் இடம் பெண்ணுக்கு 900 அளவிலும் , ஆணுக்கு 700 அளவிலும் அமைந்திருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். - இவ்வாறு 900 அமைப் பில் இடுப் பெலும் பின் பகுதிகள் அமைந்திருப்பதால் தான், பெண்ணுக்குப் பெரிதான, அழகான இடுப்பும் பின்புறமும் அமையக் காரணமாயிருக்கின்றது. சிற் றிடை என்பதைப் பிடி இடை என்பவரும் உண்டு. கைப் பிடிக் குள் அடங்கும் அளவுக் கு குறுகியதாக இருந்தால் அதைப் பிடி இடை எனலாம். பிடி என்றால் யானை என்றும் ஒர் அர்த்தம் உண்டு. பெண் யானை உடல் போன்ற பெண்ணின் இடையளவும் இடையழகும் எப்படி இருக்கும் ! உலகில் எல்லாப் பெண்களும் பெண் யானை போன்று நடக்கவா விரும்புவார்கள்? ஒரு சிலருக்கு இடையளவின் சுற்றளவு வேண்டாதத் தசைகளால் சூழப் பட்டு, கொஞ்சம் பெரிதாகத் தோன்றுகிறது. அதற் குக் காரணம் இல் லாமல் இல்லை. தேவையான அளவு வீட்டு வேலை செய்யாதது, உணவில் உள்ள ஊட்டச் சத்துக்கள், நாகரிக வாழ்வு முறைகள் அத்தனையும் சேர்ந்து, இடுப்பின் சுற்றளவை மிகவும் பெரிதுபடுத்தி, ஒர் அசிங்கமானத் தோற்றத்தைத் தந்து விடுகின்றன. தனக் குத் தெரியாமலே வளர்ந்து விட்டத் தசைகளினால், உருவாகிவிட்ட பெரிய இடையளவை,