பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 73 குறைத்து, திரவப் பொருளான தண்ணிரை அதிகமாகக் குடித்தால், உடல் சதை குறையும் என்று நினைத்து, வெறும் தண்ணிரையே வேண்டாத நேரத்திலும் கூடக் குடிக்கின்றனர். அவ்வாறு சாப்பிட்டால், அது பசியைக் குறைத்து, தேவையான அளவு உணவைக் கூட சாப் பிட முடியாமல் தடுத்து விடுவதோடு, அவர்கள் ஆசையோடு நினைத்து, ஆவலோடு எதிர் பார்க்கின்றதற்கு எதிர் மாறான பலனையே தரும் என்று உணர்வதே இல்லை. 4. மேல் நாடுகளில் உடல் தசைகளையும் இடுப்புத் தசைகளையும் குறைக்கப் (Turkish Bath) புதிய குளியல் முறையைப் பின்பற்றுகின்றார்கள். தனி குளியல் அறையிலே நின்று கொண்டு, முதலில் வெந்நீரைக் கொட் டச் செய்து, உடலைப் பதமாக பிடித்துவிடச் செய்து (Massage) பின் அதிகக் குளிர்ந்த நீரை ஊற்றச் செய்து, இவ்வாறு மாறி மாறி வெந்நீரும் தண்ணிரும் என்ற முறையிலே விட்டு, விட்டு உடலைப் பிடித்து விடும் முறைகளைப் பின்பற்றுகின்றனர். இந்த முறையினால், உடலுக்கு ஒத்துக் கொள்ளாத சூழ் நிலை உண்டாகும். அதோடு, சளி, இரு மல் , நெஞ் சுவலி போன்ற துன்பங்களும் தோன்றும் இம்முறை உடலுக்குக் கெடுதியே தவிர, நல்லது அல்ல. 5. பொதுவான விளையாட்டுக்களான, உடலாண்மை நிகழ்ச்சிகள் (Athletic Events) பந்து விளையாட்டுக்கள், பட கோட்டுதல் , சைக் கிள் ஒட் டுதல் , நீந்துதல் முதலான Ο ருப்ப மிகு விளையாட்டுக்களைத் தினம் விளையாடினாலுங் கூட அவைகள் உடலுக் குப் பொதுவான பயிற் சிகளே.