பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா மறை யாது. உடலுக்குப் உணவு ககைளிலும் முயற்சி செய்ய வேண்டியது மிக முக்கியமாகும். அதற்காகப் பட்டினி கிடக்க வேண்டுமா என்றால், அவசியமேயில்லை. உணவில் கட்டுப்பாடு இருக்கவேண்டும். அவ்வளவுதான். அரை வயிறு போதுமா என்றால், அதற்கும் அதிகமாகவே உண்ணலாம் . அதற்காக முறைகளை நீங்கள் பின்பற்றுங்கள். ஆப்பிளும், ஆரஞ்சுப் பழமும், (சாறு பிழிந்துக் குடித்தாலும் சரி, தனியாக சுவைத்துச் சாப்பிட்டாலும் சரி) கொழுப்பைக் குறைக்கும், கரைக்கும் சிறந்த பழ வகைகள் கொழுப்பைக் குறைப்பது மட்டுமல்ல. உடலுக்கு நல்ல நிறத்தையும், வளத்தையும் வழங்கும் வல்லமை உடையவை. வசதியுள்ளவர்கள் தினந்தோறும் பயன்படுத்துங்கள். நீங்கள் தினமும் உண்ணுகின்ற உணவை மிகக் கவனத்தோடும் கருத்தோடும் தேர்ந்தெடுக்க வேண்டும். அதிகமாக பால் சேர்த்துக் கொள்ளலாம். தேவையான அளவுக்குப் பழங்களைச் , சுவைத்து உண்ணலாம். பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் அதிகமாக உட்கொள்ளலாம். பழரசங்களைக் குடித்தல் மிகவும் சிறப்புள்ளதாகும். பச்சடிபோன்ற உணவு வகையையும் சேர்த்துச் சாப்பிடலாம். மேலே கூறியவற்றை உணவில் மிகுதியாகச் சேர்த்துக் கொண் டு பயிற் சிகளைத் தினம் ஒழுங்காகச்செய்தால் விரைவில் எதிர்ப்பார்த்த பயன் கிடைக்கும். கீழே குறிப்பிட்டுள்ள உணவு வகைகளை முடிந்த வரை தவிர்ப்பதும் , தள்ளி வைப் பதும்