பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா வயிறும் , பின் புறத் தசையும் , ஊளைச் சதையும் குறைய 12 பயிற்சிகள் : பயிற்சி 1 இடுப் பிலே கைளை ஊன்றியிருக்க, கால்களை சேர்த்து நிற்கவும். நன்றாக மூச்சை இழுத்துக் கொள்ளவும். இடது காலைத் தூக்கி முன்னும் பின்னும் வேகமாக செலுத்துவது போல இயக்கவும் (Swing) (30 முறை). முதலில் பழகும் போது, ஒரு நாற்காலியையோ அல்லது துணையோ பிடித்து கொண்டு கால்களை வீசவும். தேவயைான பொழுது மூச்சை விட்டு, மீண்டும் மூச்சிழுத்துக் கொள்ளவும் (பக்கம் 64 ல் உள்ள படம் போல) பயிற்சி 2 கால் களை அகலாமாக வைத்து, இடுப் பில் கைகளை ஊன்றி நிற்கவும். மூச்சிழுத்துக் கொள்ளவும். (கால்களை வளைக் காமல் கீழேயே பார்க்காமல் கண்களை மேலே நோக்கி வைத் திருப்பது போல) இடப்புறம் குனியவும், சிறிது நேரம் கழித்து, நிமிர்ந்து மூச்சை விடவும். (20 முறை) இதே போல் நின்று வலப்புறமாக வளையவும். (20 முறை) பிறகு முன்புறம் பின்புறம் என்று மாற்றிச் செய்வும் (20 முறை)