பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா கித - மூச்சை விட வேண்டும். (20 முறை) | பிறகு படத்தில் காட் டியது போல, இரண்டு கால்களையும் ஏற்றி, இறக்கவும்) பயிற்சி 8 தரையில் அல்லது விரிப்பில் மல்லாந்து படுக்கவும் (யாராவது அருகில் இருந்தால் காலைப் பிடித்துக் கொள்ளச் செய்யலாம்; அல்லது மேஜைக்கு அடியில் கால்களை உள்ளே நுழைத்து ஒரு தடுப்பை உணடாக்கிக் கொள்ளலாம்.) கைகள் இரண்டையும் தலைக்குப் பின்புறமாகக் கட்டிக் கொள்ளவும். நன்றாக மூச்சை இழுத்துக் கொள்ளவும். கால்களை மடக்காமல், எழுந்து உட்காரவும். பிறகு படுக்கும் வரை மூச்சு விடாமல் , படுத்த பிறகே மூச்சை விடவும். (10முறை) (எழும்போது பயன்படுத்துகின்ற சக்தி, வயிற்றுப் பகுதியில் இருந்துான் வரவேண்டும்.) இதே பயிற்சியில் கொஞ்சம் அனுபவமும் பயிற்சியும் பெற்ற பிறகு, கைகளை மார்புக்கு மேலே மடித்து வைத்துக் கொண்டு, கால்களை யாரும் பிடிக்காமலேயே தரையில் வைத்திருந்து, மூச்சிழுத்த பிறகு, முழங்கால்களை மடக்காமல், எழுந்து பின் முழங்கால் நோக்கி முடிந்தவரை குனிந்து, பின் படுத்து மூச்சு விடவும். (10 முறை)