பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா தேங்கி நிற் கின்ற கதியும் நிலையும் தான் மக்களுக்கு நன்றாகத் தெரியுமே குட்டையாக, சாக்கடையாக மாறிவிடுமல்லவா! அதே போல்தான், ஏதாவது ஒரு பணியிணைக் கருதி உழைக்கின்ற உடல், கலகலப்பாகவும் சுறுசுறுப்பாக வும் இருக்கும். உடற்பயிற்சி செய்கின்ற உடலுக்கோ இன்னும் கவர்ச்சியும், மலர்ச்சியும், வளர்ச்சியும் உண்டு. இதுவரை உடல் உறுப்புகளுக்குத் தேவையான பயிற்சிகளைப் பற்றி அறிந்து கொண்டோம். முக அழகின் வசீகரத்திற்கு, அதை ஏந்திக் கொண்டிருக்கும் கழுத்துக் கும் நிறைய பங்குண்டு என்பதை நாம் அறிவோம். 'கழுத்தே கிடையாதா?’ என்று பிறர் கேட்கின்ற அளவுக்கு தசைகள் திரண்டு, உருண்டு இருக்கின்ற உருவங்களை நாம் பார்த்திருக்கிறோம். அதே போல், கழுத்திலே தசைகளே இல் லாமல் வெறும் எலும் பு உருவம் போல உள்ளவர்களையும் கண்டிருக்கிறோம். அவர்களைக் கொக்குக் கழுத்து ' என்று கேலி செய்வதையும் நரம் கேட்டிருக்கிறோம். உடல் அழகைப் பற்றி நாம் தீவிரமாக சிந்தித்து செயல் படும் பொழுது, கழுத்தை மட்டும் நாம் விட்டு விட்டால் அதன் கதி என்னாவது? ஆகவே, தசைகள் நிரம்பித் தடியாக இருந்தாலும், தசையே இல்லாமல் எலும் பாக நரம் பாகத் தோன்றினாலும், காட்சிக்கு அருவருப்பாகத் தோன்றும். அதனால் , முக அசைவும் மற்ற பாவங்களும் இனிமையாக இருக்காது. ரசிக்காது.