பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா பயிற்சி 2 பயிற்சியின் தொடக்க நிலை முதற் பயிற்சி போலவே தான். இப்பொழுது, செய்யப் போகும் பயிற்சியை எதிர் மாறாகச் செய்ய வேண்டும். தலையை பின்புறமாகச் சாய்த்துக் கொள்ள வேண்டும். கையை மடித்துக் கொண்டு இரு கட்டை விரல்களால் மட்டும் தாடையைத் தாங் கிக் கொண்டிருப்பது போல வைக்கவும். நன்றாக மூச்சிழுத்துக் கொள்ளவும். தலையை மெதுவாகக் கீழ் நோக்கி அழுத்தவும். ஆனால், தாடையைத் தாங்கியக் கட்டைவிரல்களால் மேற் புறமாகவே எதிர்த் தடை செய்த வண்ணம் இருக்கவும். தலை, கீழ் ப் புறம் வந்து சேர்ந்தவுடன் மூச்சு விடவும். இந்தப் பயிற்சியையும் 30 முறை செய்யவும். பயிற்சி 3 பயிற் சிக்கு நிற் கின்ற நிலை முதற் பயிற்சி போல்தான். இந்தப் பயிற் சிக்கு, தலையை முதலில் இடப்புறமாகச் சாய்த்துக் கொண்டு நிற்கவும். நன்றாக மூச்சை இழுத்துக் கொள்ளவும். வலது கையால் தலையின் பக்கவாட்டை அழுத்திப் பிடித்துக் கொள்ளவும். பிறகு, தலையை மேல் நோக்கி உயர்த்தவும். கையால் தலைமேலே வரவிடாமல் மெதுவாகத் தடை