பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா 9. அதிக வல்லமையுடையவர்கள் ஆண்களா? பெண்களா? இந்த கேள்விக்குப் பதில், பெண்கள்தான் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அதற்கான காரணங்களை நிறையவும் காட்டுகின்றனர். 'ஆதாம் என்ற ஆண் மகனின் விலா எலும் பிலிருந்து தோன்றியவள் ஏவாள்' என்ற பெண், என்றுவேதாகமம் கூறலாம். மெலிந்த பாண்டம் (Weaker Wessel) என மேனாட்டார் குறிப்பிடலாம். பஞ்சு, பழம், மேகம், நீராவி, நிலவு, மலர் எனும் மென்மையான பொருட்களுடன் கற்பனை நயம் மிளிரக் கவிஞர்கள் உவமை காட்டலாம். என்றாலும், ஆண்மை நிறைந்ததனால் ஆண்கள் என அழைக்கப் படும் ஆண்களை விட, பெண்கள் வலிமையுள்ளவர்கள் தான். அது ஏனென்றால் அப்படித்தான். ஆராய்ச்சி நிபுணர்கள் ஆராய்ந்து அறிந்து கூறுகிற முடிவும் இப்படித்தான்; பெண்களின் உடல் மென்மையாகத் தோன்றலாம். அங்கங்களிலே பொலிவு பூரணமாகக் குடியேறி இருக்கலாம். நடையிலே நெளிவும் , நெகிழ் வும் நிறைந்திருக்கலாம் என்றாலும் இயற்கையோடு எல்லா விதத்திலும் எதிர்த்துப் போராடி வாழக்கூடிய ஆற்றல் பெண்களிடத்தில் தான் அதிகம் உள்ளது. நிலவுப் பயணத்திற்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்று விஞ்ஞானிகள் முடிவுகட்டிய பின்னர்,