பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 9I யாரை அனுப்பலாம் என்ற கேள்வி அவர்களைக் குடைந்தெடுத்தது. அவர்கள் ஆராய்ந்து கூறியமுடிவோ வியக்கத் தக்கதாக இருந்தது. ஆமாம், முதல் மனித நிலவுப் பெண்ணாகப் போகக்கூடிய தகுதி பெண்ணுக்கே கிடைத்தது. - பெண்ணினுடைய தேக அமைப்பு ஆணைவிட சிறியதாக வும் குறுகியதாகவும் இருக்கிறது என்பது மட் டு மல் ல காரணம் . பெண் ணின் தேகம் அதிக வெப் பத் தையும் அதே சமயத் தில் அதிகக் குளிரையும் தாங்கிக் கொள்ளக் கூடிய ஆற்றலை, ஆணைவிடப் பெற்றிருக்கிறது என்றதோடு அல்லாமல், உலகத்திலே உயிர் வாழ்வதற்கேற்ற ஒப்பற்ற சக்தியை எல்லா நிலையிலும் இயற்கை அவர்களுக்கு நிறைய அளித்திருக்கிறது என்றும் விஞ்ஞானிகள் கூறினார்கள். மனப் போராட் டமாயினும் சரி, பொருளாதார சீர்கேடாயினும் சரி, சுற்றுப்புற சூழ்நிலைகளிலும் சரி, பெண்கள் தான் வலிமையோடு வாழ்கின்றார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள். இருதய நோயைப் பொறுத்த வரையும் பெண்களுக்கு அந் நோய் வராது என்ற முறையில் பெண்கள் வலியவர்கள் (Stronger Sex) எனவும் கூறுகின்றார்கள். பெண்களுடைய உடல் உறுப் புக்கள் எல்லாம் சிறந்தனவாகவும் , எதையும் ஏற்று அதற்கேற்றவாறு செயல்படக் கூடிய சக்தி வாய்ந்ததாகவும், நோய்களை எதிர்த்து வெற்றி பெறக் கூடிய ஆற்றல் பெற்றிருப்பதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.