பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

குறிப்பும் இடம் பெற்றிருந்தது ஒரு மகிழ்ச்சியான விஷயமாகும்.

இரண்டு நூல்கள் ஏற்கெனவே வெளியாகியிருந்தாலும், 1742ம் ஆண்டு தான் சீட்டாட்டம் பற்றிய முழுநூல் ஒன்று வெளிவந்தது. இதன் ஆசிரியர் எட்மண்ட் ஹொய்லே (Edmund Hoyle) என்பவர்.

1672ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த இவர், ஏறத்தாழ 97 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். அவர் அந்தத் தள்ளாட்ட வயதிலும், சீட்டாட்டமான விஸ்டு பற்றிய முறைகளை விரிவாக அறிவதிலும் ஆராய்வதிலும் ஆனந்தம் கொண்டிருந்தார். அதற்கும் மேலாக, விஸ்டு பற்றிய விவரங்களை உலகத்தார் அறிந்திடச் செய்ய வேண்டுமென்ற லட்சியப் பிடிப்புடன் வாழ்ந்து வந்தார்.

ஹொய்லே 1742ம் ஆண்டுவரை, விஸ்டு ஆட்டத்தைக் கற்பித்துத்தரும் ஆசான் போலவே செயல்பட்டார். அதனை ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் கற்பித்துப் பரப்புகின்ற முனைப்பிலும் அவர் முனைப்பாக இருந்து வந்தார். அவரது அனுபவங்களே இந்த நூல் எழுதும் நுணுக்கத்தை வளர்த்தன என்றால் தான் அது மிகையல்ல.

விஸ்டு ஆட்டத்திற்குரிய விதிமுறைகள் ஒரு சீறாக இல்லை எங்கு பார்த்தாலும் ஆடுகின்றவர்கள் வசதிக் கேற்பவும், வாயாடி ஆட்டக்காரர்களின்