பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49


பாடு, பெண்களின் விளையாட்டுக்களில் வியக்கத்தகு மாற்றங்களை உண்டு பண்ணின.

1968ம் ஆண்டு மெக்சிகோ நகரில் போட்டிகள் நடைபெற்ற போது செக்கோசுலோவோகியா நட்டைச் சேர்ந்த வீரர் காசியாவஸ்கா என்னும் சீருடற் பயிற்சிகளில் சிறந்த வீராங்கனையாக (ஜிம்னாஸ்டிக்ஸ்) 7 தங்கப் பதக்கங்களை வென்றாள்.

1972ம் ஆண்டு மியூனிக்கில் நடந்த போட்டிகளில், ரினேட் ஸ்டெக்ஸ் எனும் கிழக்கு ஜெர்மனி நாட்டினள், ஓட்டப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்று விழி ப் பு ண ர் ச் சி யை ஊட்டினாள்.

1976ம் ஆண்டு மான்ட்ரியல் எனும் இடத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயங்களில், 14 வயதே நிரம்பிய ருமேனிய நாட்டுச் சிறுமி 5 பதக்கங்களை வென்றாள். நீச்சல் போட்டிகளில் 4 தங்கப்பதக்கங்களை வென்றாள் கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த கொர்னீலியா எட்னர் என்பவள்.

பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டார்கள். வெற்றி பெற்றார்கள் என்றால், அது மிகவும் சாதாரணமானசெய்தியாகும். அவர்கள் நிகழ்த்திய சாதனைகள் எல்லாம், ஆண்