பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59


கிரேக்க வீரன் ஓடி முடித்த நேரம் 2 மணி 58 நிமிடம் 50 வினாடிகள் ஆகும்.

ஆனால் நார்வே நாட்டைச்சேர்ந்த ஒரு நங்கை, பெயர் கிரேட்டா வெய்ன்ஸ், அவள் இந்த மாரதான் ஓட்டத்தை ஓடி முடித்த நேரம் 2 மணி 25 நிமிடம் 41 வினாடிகள்.

அதாவது லூயிஸ் ஓடிய நேரத்தை விட 33 நிமிடம் முன்னதாக ஓடி முடித்து புதிய சாதனை நிகழ்த்தியிருக்கிறாள் இந்தப் பெண். அவள் வெற்றி பெற்று உலகில் புகழ் அடைந்தாளே தவிர, வேறு எதுவும் அவளுக்கு நேர்ந்துவிடவில்லை. விபத்து நிகழவில்லை. மேனியும் நிலை குலைந்து போக வில்லை.

இந்த மாரதான் ஓட்டம் 1896ல் ஆரம்பிக்கப்பட்ட பொழுதே ஏன் பெண்களும் இதை ஓடக் கூடாது என்று முயன்ற பெண்கள் பலர். அவர்களிலே முக்கியமாகக் குறிப்பிடப்படுபவள் கிரேக்க நாட்டினள். பெயர் ஸ்டேமாசியா பாட்ரிசி என்பதாகும்.

முதல் ஒலிம்பிக் பந்தயங்கள் நடந்து முடிந்த பல நாட்கள் கழித்து, இந்த ஓட்ட முயற்சியை மேற்கொண்டாள். அப்பொழுது அந்த வீராங்கனை வெற்றிகரமாக தூரத்தை ஓடி முடித்து உண்டாக்கிய சாதனை நேரம் 5 மணி 30 நிமிடம் ஆகும்.