பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

சக்தியுள்ள சமுதாயத்தைப் படைக்க சக்தியுள்ள தாய்மார்களே தேவை. அந்த இலட்சியத்தின் வெளிப்பாடுதான் இந்த நூல்.

பெண்கள் உடற்பயிற்சியிலும், விளையாட்டுக்களிலும் அதிகமாக ஈடுபட வேண்டும் என்ற என் ஆர்வத்தின் மனைப்பு தான் இப்பணியில் என்னை முழுமூச்சாக ஈடுபடச் செய்தது.

இதனை அலகுற அச்சிட்டுத் தந்த கிரேஸ் பிரிண்டர் சுக்கும், ஆக்க உதவிகளைச் செய்து முடித்த R. ஆதாம் சாக்ரட்டீசுக்கும் என் அன்பு கலந்த நன்றி.

எனது விளையாட்டுத் துறை இலக்கிய நூல்களை வாங்கி ஆதரிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.


ஞானமலர் இல்லம் அன்பன்

சென்னை-17 எஸ்.நவராஜ் செல்லையா


குறிப்பு:
பெண்களால் வளர்ந்த விளையாட்டுக்களே அதிகம். பெண்கள் ஈடுபடாத விளையாட்டுக்களே இல்லை என்னும் காலம் இது. பெண்கள் வளர்த்த விளையாட்டுக்களில் சீட்டாட்டமும் ஒன்றாகும்.
அந்தப் பெருமைக்குரிய விளையாட்டின் வரலாற்றை இந்த நூலின் இறுதியில் ஒரு பகுதியாகத் தருவதில் மகிழ்ச்சியடைகிறேன். நீங்களும் மகிழ்ச்சி அடைவதற்காக