பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நண்பர் துரைமுருகன் அதைப் படித்துவிட்டுத்தான் என்னிடம் கேட்டிருக்கிருர், நான் பதில் சொன்னதும் மகிழ்ச்சியும், ஆச்சரி யமும் அடைந்தார். - - -

  • * *

மிசாவின் இரண்டாவது கட்டமாக அ த னு ைட ய பிடி தளர்ந்து கொண்டே வந்தது. பலருக்குப் பரோல் வழங்கப் பிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக பரோலில் போகும் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாயிற்று. முக்கியஸ்தர்களுக்கும், தலைவர் கலைஞருக்கும் நெருங்கியவர்களுக்கு மட்டுமே பரோல் மறுக்கப் பட்டது. நான் என்னை மருத்துவப் பரிசோதனைக் குழுவிடம் (Medical Board) Lif|GFrä&räg; அனுப்பு வே ண் டும் என்றேன். உடனே பரிசோதனைக்கு எனக்கு அனுமதி கிடைத்தது. எல்லோரும். நான் விடுதலை ஆகிவிடுவேன் என்று நின்ைத் தார்கள். ஆனல் மருத்துவக் குழு (Medical Board) எனக்கு உடல் நலம் சரியாக இருப்பதாகக் கூறி என்னுடைய க்ோரிக் க்ையை நிராகரித்து விட்டது. . ; - „ - . . .

நான் ஏற்கனவே குறிப்பிட்ட (clossed Prisoners) பகுதியில் திரிபுராவைச் சேர்ந்த இடது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நிருபன்சக்ரவர்த்தியை கொண்டுவந்து அடைத் தார்கள், பலத்த பாதுகாப்புப் போடப்பட்டு வந்தது. அவர்ை வெளியே கொண்டு போவதற்குப் போலீஸ் லாரியே உள்ளே வந்து அவரை ஏற்றிக் கொண்டு போவது வழக்கம். அவ்வளவு கடுமையாக அவரைக் கண்காணிப்பார்கள். அவர் வெளியில் வந்ததும் திரிபுரா முதலமைச்சராகி வரலாறு படைத்தார். அடக்குமுறை தோற்று போவதற்கு இது ஒரு உதாரணம்.

வட இந்தியாவில் இந்திரா காந்திக்கு எதிராக ஒரு அணி உருவாயிற்று. இந்தியாவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் டில்லியில் கூடினர்கள். தமிழ் நாட்டிலிருந்து தலைவர் கலைஞருக் கும் அழைப்பு வந்தது. அவர் டில்லிக்குப் புறப்பட்டதாகவும், அவரை வழி அனுப்புவதற்கு சென்னை ரயில் நிலையத்தில் பெரும் திரள் கூடியிருந்ததாகவும் கேள்விப்பட்டு நாங்க ள் மகிழ்ச்சி அடைந்தோம். எங்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை பிறந்தது. ஏதோ இந்தியாவில் ஒரு ஆ ச் சரி யம் நடக்கப் போகிறது என்று நாங்கள் யூகித்தோம். அதற்கு மா prs:4ി யில் கூடிய அகில இந்தியத் தலைவர்கள் ஜனதாக்கட்சி என்று ஒரு கட்சியை உருவாக்கினர்கள். * . . " ‘. . . . .

88