பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலைகளையும் அகற்றிவிட்டுத்தான் சட்டையில் ரோஜாவை சொருகிக் கொள்கிறார்கள். அதைப்போல அரசியல் சட்டம் முள் இல்லாத ரோஜாவாக இருக்க வேண்டுமென்று நாங்கள் கருதுகின்றோம்' என்ருர். 1964-ல் சட்டத்தை எரிக்க முற்பட்ட போது கூட இவ்வளவு விஸ்தாரமான விளக்கங்கள் கொடுப் பதற்கு நேரம் இல்லை. - -

நான் 1986, டிசம்பர் 7-ம் தேதி மதுரையில் அண்ணு சிலை முன்பு அரசியல் சட்டத்திற்குத் தீ வைத்துக் கொளுத்தினேன். என்ளுேடு மதுரை நகர் மாவட்டச் செயலாளர் உட்பட பலர் அரசியல் சட்டத்திற்கு நெருப்பு வைத்தார்கள். உடனடியாக நாங்கள் கைது செய்யப்பட்டு மதுரை சிறைச்சாலைக்குச் சென்று விட்டோம். 15 நாள் காவலுக்குப் பிறகு எங்கள் மீது போட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசியல் சட்டத்திற்கு, நெருப்பு வைத்துத் தேசத் துரோகம் செய்ததாகவும், 144 தடையை மீறியதாகவும் இரண்டு வழக்குகள் போடப்பட்டன. எங்கள் சார்பில் கழக வழக்கறிஞர்கள் வாதாடினர். அப்போது வெளி யான பத்திரிக்கைச் செய் தி க ளை அப்படியே கீழே தந்து இருக்கிறேன்.

1987, மதுரை, ஜனவரி மாதம் 9-ம் தேதி அன்று மதுரைக் கோர்ட்டில் தென்னரசும் தாவூதுவும் ஆஜர்படுத்தப்பட்டார்கள் 6 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. தி.மு.க வினர் தரப்பில் பி. டி. ஆர். பழனிவேல்ராஜன் பொன்முத்துராமலிங்கம் ஆகி

யோர் குறுக்கு விசாரணை செய்தார்கள். :

மதுரை அண்ளுசில அருகே இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு கைதான தி.மு.க. அமைப்புச் செயலாளர் எஸ். எஸ். தென்னரசு, மதுரை நகர் மாவட்டச் செயலாளர் கே. தாவூது, அவைத் தலைவர் பெரியாண்டி முன்னுள் கவுன் சிலர் ஆறுமுகம் இளைஞர் அணி அமைப்பாளர் கா. பாண்டிய ராஜன், மாணவர் அணி அமைப்பாளர் கொ குபேந்திரன் பேச்சாளர் விடுதலை ரத்தினம் உட்பட எழுபத்திரண்டு தி.மு.க. வினர் மதுரை நீதித்துறை தலைமை மாஜிஸ்திரேட் பி. தனபால் முன்னிலையில் நேற்று ஆஜர் படுத்தப்பட்டனர்.

இவர்கள்மீது விளக்குத்துரண் போலீசார் ஒரு வழக்கும் மதுரை.நகர் போலீஸ் சூப்பிரெண்டு ஒரு வழக்கும் தொடர்ந்து உள்ளனர்". . .

"இந்த இரண்டு வழக்குகளையும் ஒன்ருக நடத்தவேண்டும் என்று தி.மு. கழகத்தின் சார்பில் கோர்ட்டில் ஒரு மனு

93