பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

கேள்வி :- இந்தச் சம்பவத்தின் போது போலீசார் உங்களைக் - கைது செய்ததாகவும் பார்வை மகஜரில் அவர்

கையெழுத்துப் போட்டதாகவும் சாட்சி கூறுகிருரே? பதில் :- கைது செய்தது உண்மை. மற்றவை தெரியாது.

கேள்வி:- போலிஸ் அதிகாரி உங்களிடம் கையெழுத்து வாங் கிய போது அப்படிச் சட்டம் இருப்பது தங்களுக்குத் தெரியும் என்று கூறி அங்கிருந்து, ஊர்வலமாக புறப்பட்டுச் சென்று மேடையில் ஏறி இந்திய அரசி யல் அமைபுப் சட்டப் பிரிவு 343ன் நகலை தீயிட்டுக் கொளுத்தியதாகச் சாட்சி கூறியுள்ளாரே? 3.

பதில் :- தடையை மீறிச் செல்லவில்லை. சட்டத்தை எரிக்க - வில்லை. ஒரு தாளில் எழுதி எரித்தோம்,

இவ்வாறு அவர்கள் பதில் கூறிஞர்கள்.

பிறகு வழக்கறிஞர் வாதம் நடந்தது. அரசு வழக் கறிஞர் பாலசுந்தரம் கூறியதாவது :

போலிஸ் தடை உத்தரவுபோட, போலீஸ் துணை சூப்பி ரெண்டிற்கு அதிகாரம் இல்லை என்ருலும் போலீஸ் நடைமுறை உத்திரவுப்படி அவருக்கு அதிகாரம் உள்ளது. இந்திய தண்ட னைச் சட்டம் 143 (சட்ட விரோதமாகக் கூடுதல்)188 (அரசு அதி காரியால் போடப்பட்ட உத்தரவை மீறுதல்) ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு உள்ளதால் இதற்கே தண்டனை வழங்கலாம். .கூட்டமாக வருபவர்களில் ஒருவரிடத்தில் மட்டும் உத்தரவு நகலைத் தாக்கல் செய்தாலே ப்ோதும். அதன்படி தாவூது, .காவேரி மணியம் ஆகியோரிடத்தில் நகல் கொடுக்கப்பட்டு கையெழுத்து வாங்கப்பட்டு உள்ளது. அவர்கள் தெரிந்தே தடையை மீறி உள்ளனர் என்பது நிரூபணம் ஆகிறது. மற்ற வர்களுக்கு இப்படி ஒரு உத்தரவு இருக்கிறது என்று தெரியச் செய்வதே போதுமானது. இது போன்ற நேரங்களில் பொது மக்களுக்கு இடையூறும் பீதியும் இருந்தது என்பதை நிரூபிக்கத் தேவையில்லை. எனவே தடை உத்தரவை மீறிச் சட்டவிரோத மாகக் கூடி அரசியல் அமைப்புச்சட்டத்தின் ஒரு பிரிவை எரித்த குற்றத்திற்கும் தண்டனை வழங்க வேண்டும்'. -

இதற்குப்பதில் அளித்து தி.மு.க வினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் வாதிட்டார். அதன் விவரம் வருமாறு :- -

"போலீஸ் தடை உத்தரவு நகல் ஒருவருக்குத்தான் தரப் பட்டது. மற்றவர்களுக்குத் தரப்படவில்லை. மற்றவர்களுக்கும்

103