பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீட்டை இடிக்கத் திட்டம்

1975 தொடக்கத்திலேயே மதுரையில் என் வீட்டைவணிகவரித்துறை அலுவலகத்திற்கு வாடகைக்கு விட்டு விட்டு, நான் கலைஞர். நகரிலேயே ஒரு சிறிய வாடகை வீட்டிற்குக் குடியேறியிருந்தேன்.

1976 ஜனவரியில் கழக அரசு கலைக்கப்பட்ட மறு நிமிடமே கைது செய்யப்பட்டேன். சில நாட்கள் கழித்து என் இல்லத்தை வருமானவரித்துறையினர் சோதனை இடத்திட்டமிட்டுவருவதாக எனக்குத் தெரிந்தது. நான் கலங்கவில்லை. நன்ருகப் பார்க்கட்டும் என்று அலட்சிய மாகவே இருந்தேன்.

தலைவர் கலைஞரின் பணம், நகை, முதலியவற்றை என் இல்லத்தில் நான் புதைத்து வைத்திருப்பதாகவும், அதைப்போல ந ண் ப ர் கோ. சி. மணியும் மறைத்து வைத்திருப்பதாகவும் மத்திய அரசுக்குத் தவருண தகவல் கிடைத்திருக்கிறது. அப்போது மதுரையில் எஸ் பி. யாக இருந்த திரு. ராஜசேகர நாயர் அவர்கள். அதற்கு இடந் தரவில்லை, கலைஞரின் சொத்துக்களை தென்னரசு புதைத்து வைத்திருந்தால் அவர் வீட்டை வாடகைக்கு விட்டிருக்க மாட்டார். அவர் இப்போது குடியிருக்கும் வாடகை வீட்டிலும் புதைக்க முடியாது' என்று கூறியிருக்கிருர், அதற்குப் பிறகு என் வீட்டை இடிக்க இருந்த திட்டம் கைவிடப்பட்டது.

வினை விடுமா?

எனக்கு மாரடைப்பு வந்த மறு நாளே நான் கைதாகினேன். தனியார் மருத்துவ மனையில் இருக்க எனக்கு அனுமதியில்லை. ஆகவே சிறையிலிருந்து திங்கட் கிழமை தோறும் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுப் போய்க்கொண்டிருந்தேன்.

ஒரு வருஷத்திற்கு உப்பில்லாமல் சாப்பிடவேண்டும், இல்லாவிட்டால் இரண்டாவது 'அட்டாக் வருவதற்கு வாய்ப்பு வந்துவிடும் என்று இருதய சிகிச்சை நிபுணர்கள் கூறிவிட்டார்கள். இதற்கிடையில் என்ன மெடிக்கல் போர்டுக்கு அனுப்பி பூர்வாங்கமாகப் பரிசோதித்து அர சுக்குத் தகவல் திரும்படி அரசாங்கத்திடமிருந்து சிறைக்கு

112