பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணமகன் : மணமகள் :

- Jo 933 * a. * • * அருளுசலம - தமயந்தி நாச்சியார்

கழகத்தின் தூண்களில் ஒருவராக விளங்குகின்ற அருமை தென்னரசு அவர்களுடைய செல்வி தமயந்தி நாச்சியாருக்கும் தேவகோட்டை காளிதாசன் அவர்களுடைய செல்வன் அருணு சலம் என்கின்ற அருணுக்கும் நம் அனைவருடைய இனிய வாழ்த்துக்கள்ோடு மணவிழா நிகழ்ச்சி இங்கே நிறைவேறியிருக் கின்றது. இந்த மணவிழாவிலே தென்னரசு அவர்களுடைய அருமை பெருமைகளையும் இந்த இயக்கத்திற்கு அவர் பல ஆண்டு காலமாக ஆற்றி வருகின்ற தொண்டினையும் இந்த இயக்கத்தின் ஒவ்வொரு அங்குல வளர்ச்சிக்கும் அவர் புரிந்து வந்துள்ள தியாகத்தையும் இன்னமும் இந்த இயக்கத்தை வளர்ப்பதற்காக அவர் எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகளையும் நம்முடைய கழகத்தின் முன்னோடிகளும் மற்ற நண்பர்களும் எடுத்துக் கூறியிருக்கிருர்கள். , r

. தென்னரசு அவர்களே சற்றொப்ப 36 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகப்படுத்தியவர் கவிஞர் கண்ணதாசன். சிறு கூடல்பட்டி, காரைக்குடி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சிவகங்கை வழியாக மதுரைக்கு வரும்போது திருக்கோட்டியூர் வழியாகக் கார் சென்ற நேரத்தில் கண்ணதாசன் திடீரென்று காரை. நிறுத்தச் சொன்னர். இங்கே ஒரு ஆர்வமிக்க கழக இளைஞனை உனக்கு அறிமுகப்படுத்துகிறேன்-என்று சொல்லி இந்த இளைஞனே அன்றைக்கு எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது இந்த இளைஞனுக்குப் பெயர் சிந்தாமணி.

கண்ணதாசன்-சிந்தாமணியை உனக்கு அறிமுகம் செய் கிறேன் என்று சொன்னபோது வரப்போவது ஆளு? பெண்ணு? என்ற சந்தேகத்தோடு கவனித்தபோது இந்த சிந்தாமணிதான் வந்தார். சிறிது நேரம் தெருவில் இருந்தவாறே அளவளாவிக் கொண்டிருந்தோம். அப்போதெல்லாம் திராவிடக் கழகத்தினர் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் நண்பர்களை உபசரிக்கும் போது ஆங்காங்கு ஒரு கோப்பை தேநீர் வாங்கி வழங்குவ துண்டு. அதைப்போல இந்த சிந்தாமணி அவர்கள் அவசர அவசரமாகத் தன்னுடைய தோழர்களை அனுப்பி எனக்கும்

130