பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்களுக்குப்பிற்பட்ட காலமாக இருந்தாலும் சரி.தி.மு.கழகம் களம் அமைக்கின்றது என்ருல் அந்தக் களத்தில் நான் எந்த இடத்தில்" என்று கேட்கின்ற முதல் ஆளாக தென்னரசு இருந் தார்-இருக்கிருர். என்றைக்கும் இருப்பார் என்பதில் எனக்குக் கிஞ்சிற்றும் சந்தேகம் கிடையாது. -

தா. கிருஷ்ணன் பேசும்போது தென்னரசு 25 முறை சிறை சென்ருர், என்ன எம். பி. யாக ஆக்கியவர். யார் யாரையோ எம்.எல்.ஏ. வாக ஆக்கியவர், இந்த முகவை மாவட்டம் பிரிக்கப் படாமல் ஒன்ருக இருந்தபோது தி. மு. கழக அணி எல்லாத் தொகுதிகளிலும் வெற்றி பெறக்கூடிய அளவிற்கு பணியாற்றிய ஆற்றல் வாய்ந்தவர். அப்படிப்பட்டவருக்குக் கழகம் கொடுத்த பரிசு எதுவுமில்லை என்று சொன்னர். நான் கிருஷ்ணனுக்குச் சொல்கிறேன்-என்னையே நான் தென்னரசுவிற்குப் பரிசாகக் .ெ கா டு த் தி ரு க்கு ம் போது இதைவிட வேறு ஒரு பரிசை தென்னரசைப் போன்றவர்கள் எதிர்பார்ப்பார்கள் என்று நிச்சயமாக நான் எண்ணவில்லை. எங்களைப் போன்றவர்களின் உள்ளங்களையே தென்னரசுவிற்கு நாங்கள் பரிசாகத் தந்திருக் கின்ருேம், .

இந்த இயக்கம் பத்துப் பன்னிரண்டு ஆண்டு காலத்திலே பட்ட சி த் தி ர. வ ைத க ள் கொஞ்சம் நஞ்சமல்ல. சந்தித்த சோதனைகள், சந்தித்த வேதனைகள், சாதாரணமானவ்ைகள் அல்ல. - அவைகளை எல்லாம் நாங்கள் இன்றைக்குத் தாண்டி, கடந்து, காட்டாறுகளைப் பற்றிக் கவலைப்படாமல், வீசிய புயலைக் கூட வலது கையால் தள்ளிவிட்டு இடி, மழை, மின்னல் இவைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தி. மு. கழகம் என்னும் இந்த இலட்சியத்திருவிளக்கை அணயாமல் காப்பாற்றி இன்றைக்கு உச்சி முகட்டிற்குக் கொண்டுவந்திருக், கின்ருேம் என்ருல் அது தனிப்பட்ட கருணுநிதியின் ஆற்றல் அல்ல, தனிப்பட்ட பேராசிரியர் அவர்களின் ஆற்றல் அல்ல தனிப்பட்ட நாஞ்சிலாரோ, மாறனே, பொன். முத்துராம லிங்கமோ, தென்னரசோ இவர்களுடைய ஆற்றல் அல்ல. தென்னரசைப் போன்ற இலட்சக்கணக்கான தொண்டர்கள் உடன் பிறப்புக்கள் அத்தனை பேரும் தந்த ஆற்றல்தான் இன்றைக்கு தி. மு. கழகத்தின் ஒளிவிளக்கை அணையாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கின்ற்து. -

அப்படிபட்டவருடைய இல்லத்திலே நடைபெறுகின்ற மணவிழா இது. கழகக் குடும்பத்திலே நடைபெறுகின்ற மண விழா. என்னுடைய குடும்பத்திலே நடைபெறுகின்ற மணவிழா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அருமை நண்பர் குன்னக்குடி

135