பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீர்ப்புக் கூறினர்-ஒரு வருடக் கடுங்காவல் ! நீதிபதி மிக வும் நல்லவர். இரக்கமுள்ளவர். மார்க்கண்டேயனுக்கு ஒன்பது மாதம் என்ற உடனேயே நான் அருகிலிருந்த நண்பர் தா. கிருஷ்ணன், M.A., அவர்களிடம் சொன்னேன், நிச்சயமாக எனக்கு 18 மாதக் கடுங்காவலாகத்தானிருக்குமென்று! ஆல்ை ஏமாந்து விட்டேன். மாதம் பன்னிரெண்டுதானே போட்டுள் ளார்! நல்லவரில்லையா? இன்ைெரு வகையில் நான் அவரை மனதாரப் பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன். எனக்கு அவர் இவ்வளவு நீண்டகால தண்டனையை அளித்திராவிட் டால் கட்சியில் எனக்கென்று ஒரு இடத்தை நான் பிடித்துக் கொள்ள வேறு வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டல்லவா இருக்கவேண்டும்! -

எனது தண்டனை பத்திரிக்கைகளில் வெளியானதிலிருந்து என் நிலை கொஞ்சம் உயர்ந்துதான் வந்தது என்பதை நான் ஒப்புக்கொள்வது கர்வமாகாது, கர்வம் கொள்ள வேண்டிய காரியத்தில் கர்வம் கொள்ளாமற்போல்ை அரசியலில் பிள்ளைப் பூச்சிகளைப் போலாகிவிடுவோம்; கை விலங்கோடு நாம் தெரு வில் போவதைப் பார்த்துச் சிரித்தவர்கள், பின்னர் நமக்கே ஆணையிடும் தம்பிரான்களாவதற்கு அரசியல் வாதிகளின் பிள்ளைப்பூச்சிக் குணம் தானே காரணம்! அரசியலில் பிள்ளைப் பூச்சிக் குணம் அறவே கூடாது.

அன்றிரவே என்னை மதுரை மத்திய சிறைச் சாலைக்குக் கொண்டு வந்து விட்டார்கள். என்னுடன் நண்பர் மார்க்கண் டேயனும் கொண்டு வரப்பட்டார். சிறைச்சாலை வாசலுக்கு வரும்போது இரவு மணி 7.30. கடைசியாக ஆசையோடு ஆளுக்கு நான்கு இட்டிலிகளைப் புட்டுப் போட்டுக் கொண் டோம் சுதந்திரம், இன்ப நினைவுகள், சுவையான சாப்பாடு, பந்தம், பாசம் எல்லாவற்றிற்கும் முழுக்குப் போட்டுவிட்டு 7-45க்கு சிறைச்சாலைக்குள் வந்து விட்டோம். சுற்றிலும் வாளுேக்கி வளர்ந்த மதில்சுவர்கள். ஆரம்பப் பாடசாலையைப் போல் மூலைக்கு மூலை சலசலப்பு! நாங்கள் சிறைக் கோட்டத் தின் முகப்பு வாசலில் நிற்கும்போதே சிறைக்குள்ளே எங்கள் வருகை தெரிந்துவிட்டது. பி. வகுப்பிலிருந்த பலர் எங்களை எதிர்நோக்கி இருந்தாலும் உணர்ச்சியோடும் உள்ளன்புடனும் எங்களை எதிர்பார்த்து இரண்டு ஜீவன்கள் சிறைக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு நின்றன.

வணக்கம்!'

வருக!' - -

13