பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கென்று சில பாஷைகள் உண்டு. கருப்புக்குல்லா, லோலாயி,

லைபர், லாக்அப், பைல், கமான், கைவிலங்கு என்பன சிறைக் குள்ளே புழங்கும் கலைச்சொற்கள்’.

இந்தியா விடுதலை பெற்றபின் சிறை சீர்திருத்தமடைந் திருக்குமென வெளியில் உள்ளவர்கள் நம்பியிருக்கக்கூடும். நான்கூட முதலில் அப்படித்தான் நினைத்தேன். 1982-ல் நான் விலைவாசி உயர்வு க ண் ட ன அறப்போரில் சிறையிலிருந்த போதே பர்தி புரிந்து கொண்டேன். இப்போது தான் முழுவதும் தெரிய வாய்ப்புக் கிடைத்தது. இந்தியா வெள்ளை ஏகாதிபத்தி யத்தின் கீழ் இருந்த காலத்தில் சிறை வி தி க ள் எப்படி இருந்ததோ அப்படியேதான் அந்த அ ந் நி ய ன் போன பின்னரும் இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் சிறையிலிருந்து அல்லற் பட்டும் அவர்கள் அதிகாரம் பெற்றபின் சிறைவிதி களைத் தளர்த்தவில்லையே என்பதுதான் நமது கவலை.

ஜெயில் என்பது ஆங்கிலச் சொல். அதுவே வேரூன்றி விட்டது. சமுதாய ஒப்பந்தம் ஏற்பட்ட காலத்திலிருந்தே ஜெயில் உண்டாகியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் மனித இரத்தத்தில் ஜெயில்' என்று சொல்லும்போது திகில் ஏற்படும் படியான உணர்ச்சி கலந்திருக்குமா? கடவுளுக்குப் போட்டியாக மனிதன் பூலோகத்தில் ஏற்படுத்தியிருக்கும் நரகம்தான் சிறை என்று அந்தக் காலத்தில் காங்கிரஸ்காரர்களே மேடையில் பேச நான் கேட்டிருக்கிறேன். அந்த நரகத்தைக் கொஞ்சங்கூட இன்னும் மாற்ருமல் இருக்கிருர்களே ஏன்? தங்களைப்போல் மற்றவர்களும்அனுபவிக்க வேண்டும் என்ற பெருநோக்கமாக’ இருக்குமோ இயந்திரம் கெட்டுப்போல்ை ஒர்க்ஷாப், அல்லது ரிப்பேர் ஷாப் எங்காவது ஒரு இடத்திற்கு அனுப்பி வைக்கிருர்கள் அல்லவா! அதுபோலத்தான் மனிதனின் உள் ளத்தில் மாசு ஏற்பட்டு அவன் வழி தவறினுல் அவனைச் சரிப் படுத்தச் சிறைக்கு அனுப்புகிருர்கள். ஆனல் சிறை எதிர்பார்த்த படி ரிப்பேர் ஷாப்பாக இருக்கிறதா? பழுதடைந்த மனிதனைச் சீர்படுத்தி அனுப்புகிறதா? இல்லை. ஒரு உலகம் அல்லது ஒரு சிறியநாடு, அல்லது ஒரு சிற்றுார் எங்காவது கவனிப்பாரற்றுக் கிடக்கிற தென்ருல் அது சிறைதான்! இரண்டாயிரம் மூவாயிரம் பேர்கள் வாயில்லாப் பூச்சிகளைப்போல் நடமாடுகிருர்கள். கோட்டைச் சுவர்களுக்கு வெளியே இருக்கும் உலகம் இவர் களைப்பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

குற்றவாளிகளை நீதிபதி தண்டிக்கிருர். அவர் சட்டப் புத்த கப்படி புனிதமாக நடக்கிருர். ஆனல் தண்டிக்கப்பட்ட குற்ற வாளி எப்படி வளரப் போகிருன் என்று சிந்திக்க அவருக்கு

20