பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிமையில்லாமலிருக்கலாம். மூன்று மாதம் சிறையிலிருந்து விட்டு விடுதலையடைந்த அவன் மீண்டும் அதே நீதிபதி முன்பு மற்ருெரு குற்றத்திற்காக நிறுத்தப்பட்டு அதிக தண்டனை பெற்று சிறைக்கு வருகிருன். அப்போதாவது நீதிபதி சிந்திக் கலாம். சிறைக்குப் போய் அவன் திருந்தவில்லை, திருந்து வதற்கு அங்கு மார்க்கமில்லை என்று அப்படி யாரும் சிந்தித்த தாகத் தெரியவில்லை. பொதுவாக எந்தச் சிறைச்சாலையை எடுத்துக்கொண்டாலும் இப்போது திருப்பித் திருப்பித்தண்டனை பெறும் பழங்குற்றவாளிகள் தான் அதிகமாக இருக்கிருர்கள். அவர்களுக்குச் சிறையில் 'கருப்புக் குல்லாக்கள்’’ எ ன் று பெயர். அரைக்கால் சட்டையும், குறைக் கைப் பாடியும், குரங் குக் குல்லாவுமே அவர்களது நிரந்தர உருப்புக்களாகி விடுகின்றன. - - -

மைேதத்துவ மேதைகள் 'குற்றம் 90 நோய்'- என்கி ருர்கள், குற்றவாளிகளின் மருத்துவச் சாலையாக இருக்க வேண் டிய சிறை பயமுறுத்தும் நரக லோகமாக புகழ் பெற்று விட்டது.

கொலைக்குத் தூக்குத் தண்டனையும் ஆயுள் தண்டனையும் இருந்தும்கூட இன்னும் கொலை வழக்குகள் குறையவில்லை. இதிலிருந்து கொடிய தண்ட ைகளால் பயனில்லை என்று தெரி கிறது. குற்றவாளிகளின் உள்ளங்களைச் சீர்படுத்தும் மளுே வைத்தியம் கையாளப்படும்வரை தண்டனைகளால் குற்றவாளி களைக் குறைத்து விடவும் முடியாது. சீர்திருத்தி விடவும் இயலாது. - - -

சிறையில் சாதிப் பாகுபாடு இல்லை. ஒரு வேளை அவன் இன்ன சாதி, இவன் இன்ன சாதி என்று தெரிந்திருந்தால் அதுவும் தலைதுாக்கலாம். ஆனால் தண்டனைக் காலத்தை ஒட்டி அந்தஸ்து உருவெடுக்கிறது. கொலைக்குற்றம் புரிந்து இருபது வரு ம் தண்டனை பெற்றவன் திருட்டுக் குற்ற வாளியை ஏள னம் செய்கிருன். இது ஒரு தண்டனையா? இரண்டுவருடம், மூன்று வருடம் எல்லாம் எனக்கு வேஷ்டி துவைக்கும் நேரத்திலே ஓடிவிடும் என்று மார் தட்டுகிருன். இதல்ை சிறிய தண்டனைக் காரர்கள் பெரிய தண்டனைக்காரர்களைக் கண்டால் பயந்து அவர்களுக்கு சேவகம் புரியத்தொடங்கி விடுகிருர்கள். ஆசான்-சீடன் நிலை உறுவாகி குருபக்தி வரைபோய் விடுகிறது கைதி வாழ்க்கை. இப்படிப் பழைய கைதி புதிய கைதிக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்து விடுகிருன். அப்படிப் பட்ட வாத்தியார்களை லோலாயி என்று சிறையில் கேவல மாகப் பேசுவார்கள். இவன் சேலம் லோலாயி, இவன் கடலூர் லோலாயி என்று தனிப்புகழ் பெற்றவர்களும் கைதிகளுக்குள்

21