பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'காரில் உட்கார்ந்து இருக்கிருர்கள். மனு,இண்டர்வியூ ஜெயிலரிடம் இருக்கிறது! பில்லப்பன் என்பவர் இங்குதான் இருக்கிருரா? ஆர்டர்லி கேட்டார். ஆர்டர்லி என்ருல் பியூன் போல் ஒரு பணியாள்.அவரும் கைதிதான். சிறையில் அதிகாரி களுக்கு ஆர்டர்லிகளாக இருப்பவர்கள் அனைவ்ரும் கிராம அதி காரிகள் தான்' கையாடல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள்.

இண்டர்வியூவுக்குப் போகும்போது சிறை உடைகள்தான் அணியவேண்டும் முழுக்கை சட்டை, முழுக்கால் சட்டை அணிந்துகொண்டு தலையில் குல்லாயுடன் ஜெயிலர் அறைக்குப் போனேன், நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லை-அறிஞர் அண்ணு அங்கு உட்கார்ந்திருந்தார். " . . . . . . .

“வணக்கம் அண்ணு' -

நலமாக இருக்கிருயா?

'உற்சாகமாக இருக்கிறேன்'

'உன்னத்தான் அதிகநாள் தண்டித்து விட்டார்கள்!-- வருத்தத்துடன் சொன்னர் அண்ணு. - - "பரவாயில்லை! எதிர்காலத்திற்கு இது ஒரு பயிற்சிதானே! , , . அண்ணு அவர்களுடன் நான் ஒருநாளும் இப்படிப் பேசியதில்லை.

'பில்லப்பனும் மாதவனும் புதுக்கோட்டைச் %. சிறையில் இருக்கிருர்கள்.' - ". . . . . *... .

பில்லப்பன் உன்னுடன் இருப்பதாகச் சொன்னர்கள்!" " . .

'e-fGar நமது தோழர்கள் நிறையப்பேர் @ಅಹಥಿಆfs.i. அவர்களையும் ப்ார்த்தால் உற்சாகமாகயிருப்பார்கள். ஏற்பாடு செய்யட்டுமா?’ என்றேன். - . . . . . . . - . . . . . . . .

'உன்னைப் பார்த்தால் போதும் நீ அவர்களுக்கு எடுத்துச்

ச்ொல்லு' என்ருர், பெரிய பிரச்சனைகளை மிகச் சாதாரணமாக முடிவுகட்டுவது அண்ணுவின் சுபாவம் ஆளுல் அண்ணுவின் மீது உயிரையே வைத்திருக்கும் கட்சித் தோழர்களுக்கு என் உரை சாந்தியாயிருக்குமா? - . .

அண்ணு, வாழைப் பழங்களும், திராட்சைப் பழங்களும் எனக்காக வாங்கி வந்திருந்தார். அவை அழுகக் கூ டி ய பொருளாக இல்லாமல் இருந்தால் நானும் சாப்பிடாமல் இருந் திருப்பேன் அண்ணு தந்தவை அல்லவா -

25