பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலையத்தில், மாணவர்களாகிய நாங்கள் அவரைச் சந்தித்து, மாலையணிவித்து மரியாதை செய்தோம். அன்று இரவு முதன் முறையாக சிவகங்கையில் அவரது சொற்பொழிவைக் கேட் டேன். ஜனநாயகம்' என்ற தலைப்பில் மூன்று மணி நேரம் பேசினர். . . ." . ... • - -

அதன் பிறகு 1948-ல் மதுரையில் பார்த்தேன். பெரிய பொதுக்கூட்டத்தில் பேசினர். மறுநாள் காலை டாக்டர் அருளு சலம் அவர்கள் இல்லத்தில் தங்கியிருந்த அண்ணுவைப் பார்ப் பதற்காகப் போனேன். அவரைத் தொட்டுப்பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை அங்கே அண்ணு அப்போது முகச்சவரம் செய்து கொள்வதற்கு ஆயத்தமாக இருந்தார். ஒரு வணக்கம் போட்டு விட்டு வந்தேன்.

1952-ல் நான் சென்னைக்குக் குடிபுகுந்தேன். அண்ணுவை வாரம் ஒருமுறை பார்க்கும் வாய்ப்பு, பேசும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. 1953-ல் அண்ணுவிடமே பணி புரி யும் அரிய வாய்ப்பைப் பெற்றேன். அண்ணுவின் உள்ளம் ஒரு தேன்கூடு அதில் நூற்றுக்கணக்கான அறைகள் உண்டு. அவற்றில் நமக் கும் ஒரு அறை கிடைக்காதா என்று ஏங்குவோர்தான் கட்சியில் அதிகம் பேர். எனக்குக் கூட அந்தப் பேராசை உண்டு. பணத் தால், செருக்கால், ஏமாற்று வித்தைகளால், நடிப்பால் யாரும் அண்ணுவின் அன்பைப் பெற முடியாது. கன்னியமான பொது வாழ்க்கையையும், தூய்மையான தியாகத்தையும் மேற்கொள் வோரை அண்ணு, மதிக்கத் தவறமாட்டார். எனக்கு இதில் அசையாத நம்பிக்கை உண்டு. எந்தக்காரியத்தையும் நான் அவருடைய யோசனை கேட்டுத்தான் செய்வேன். சொந்த விஷ் யங்களில்கூட அத்தநிலை தான்! நான் நினைத்தபடி-எதிர்பார்த்த படி-கனவு கண்டபடி-அவர் என் மனதில் பூரணமாக நிறைந்து விட்டார். என் பெயர் சொல்லி அவர் அடிக்கடி கூப்பிடுவார். சொர்க்கம் போவதற்கு ஊசிமுனையில் தவமிருந்து வெற்றி பெற்றவனைப்போல் என் மனம் குளிர்ந்தது. - .

4-11-64

சிறையில் ஒரு மருத்துவமனை இரு க் கி றது. அதில் பதின்ந்து படுக்கைகள் இருக்கின்றன. இரண்டு டாக்டர்கள்; இரண்டு கம்பவுண்டர்கள், வேலை செய்கிருர்கள். அலமாரி களில் நிறையப் புட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றிலும் மருந்து நிறைந்தே இருக்கும். ஒன்றில் கடல் தண்ணீர், மற்ருென்றில் கிணற்றுத்தண்ணீர், வேருென்றில்

27