பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வலது பக்கம்!'

இல்லை நீ பொய் சொல்லுகிருய்! வலதுபக்கம் வலித்தால் உன்னை இங்கே அனுப்பமாட்டார்களே, தத்தநேரிக்குத் (சுடு காடு) தானே அனுப்புவார்கள்!'

"டாக்டர் எனக்கு மிக்சர் கொடுக்கச் சொன்னரய்யா!'

"மறதியாகச் சொல்லியிருப்பார். ஒரே வியாதிக்கு மிக்சர் கொடுப்பதில்லை. உனக்கு இன்னும் இ ர ண் டு வியாதிகள் சேர்ந்து வரட்டும் மூன்று மருந்தையும் கலக்கித்தர்றேன். அது

தான் மிக்சர்! போ!

'ஐயா வர வர எனக்கு எடை குறைகிறது!"

' குறையட்டுமே! எடை குறைந்தால் தான் பதவி உயரும்! லால் பகதூர் எடை என்ன தெரியுமா? உன் எடையில் பாதிதான்!” -

இதுதான் சிறைச்சாலையில் உள்ள மருத்துவ மனையின் நிலை. மதுரைச் சிறையில்தான் இப்படி என்று இல்லை. எல்லாச் சிறைச்சாலைகளிலுமே நிலைமை இப்படித்தான். -

பெயருக்கு இரண்டு டாக்டர்கள். நான்கு கம்பவுண்ட்ர்கள் ஹாஸ்பிடல்' என்று ஒரு பெரிய பெயர்ப்பலகை-நோய்குத் தான் மருந்தில்லை; நோயாளிகளிடம் காட்ட பரிவுகூடவா இல்லாமல் போய்விடும்! . . . . . . .

10 - 11 - 64

சிறையில் ஞாயிறுதோறும் உபன்யாசம் நடைபெறும். சங்கராச்சாரியார் பக்தர்கள் ஒருபுறம், பாதிரிகள் வேருெரு புரம்-போதனை நடத்துவார்கள். கோயில்களில் கொள்ளை நடத்தி வந்திருப்பவர்கள்கூட அங்கே அந்தப் பரமபக்தர்களின் கூட்டத்தில் அங்கம் பெற்றிருப்பார்கள். r : نه ' ' ' ..... . . ."

பொன்னுச்சாமித் தேவர்.கே.வி.கே.சாமி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றவர்-என்னிடம் வந்தார்.

உங்களுக்குக் குன்றக்குடி அடிகளார் நல்ல அறிமுக மாமே!’ என்ருர். ... • o

'தெரியும்' என்றேன்.

ஒருநாளைக்கு இங்கே வந்து உபன்யாசம் செய்ய எற்பாடு

பண்ணுங்களேன்! அவர் பிரமாதமாகப் பேசுவாராமே! கடிதம்

30