பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறைக்கு ஒதுக்கியுள்ளேன். குறித்த நேரத்தில் வந்து கலந்து கொள்கிறேன்." இதுதான் அடிகளார் கடிதத்தின் உள்ளடக்கம்.

16 - 11 - 64

சிறை மானேஜர் - அதாவது வரவு செலவுத் தணிக்கை சம்பந்தப்பட்ட பொறுப்பாளர் என்ன அழைத்திருந்தார். நான் சிறை உடையில்போனேன். அ வ ர் சிரித்துக்கொண்டே பேசினர். : - - -

- அடிகளார் 22-11-64-ம் தேதி மாலை வருகிருர், அவருக்கு மாலை போடுவதும், அவரோடு நீங்கள் சுமுகமாக உறையாடுவதும் தடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் ஒரு கெளரவ மான அரசியல் கைதியாகத்தான் நடந்துகொள்ள வேண்டும். இது எங்கள். நிலை. இப்படி ஒரு கட்டுப்பாட்டை நாங்க ள் உங்களுக்கு விதிக்கவேண்டிய நிலைக்காக வருந்துகிருேம்' என்ருர் மானேஜர். . . . . . . • , o

நான் எந்தக் கட்டுப்பாட்டுக்கும் எந்தக் காலத்திலும் கட்டுப்பட்டு வந்தவனல்ல. இருந்தாலும் சிறை அதிகாரி நமக் குக் கட்டுப்பாடு விதித்திருக்கிருர் என்பதையே மனதில் கொள் ளாமல் ஒரு பார்வையாளராக இருந்துவிட்டால் என்ன? என்று கூட எனக்குத் தோன்றியது. நடக்கப்போவது கட்சிக்கூட்டமா? இல்லையே? ஏதோ ஒரு பிரச்சாரம் அதில் நமக்கு ஏன் முக்கியத்துவம்-இப்படித்தான் எடுத்த எடுப்பில் நினைத்தேன். நான் நினைத்ததுதான் சரியும் கூட.

21 - 11 - 64: . . . " -

தோழர் பொன்னுச்சாமியிடம் 'அடிகளார் கூட்டத்திற்கு ஒலிபெருக்கி ஏற்பாடுகளெல்லாம் செய்துவிட்டீர்களா?' என்று கேட்டேன். * . . . - । சங்கராச்சாரியார் வாங்கிக்கொடுத்த ஒலிப்பெருக்கி இருக் கிறது. ஏற்பாடு செய்து கொள்வோம் என்ருர்.

உற்சாகமாகத்தரன் இருக்கிறேன். மாலைக்குப் பதிலாக சிறையில் எங்கள் பிளாக்கில் உள்ள ரோஜாச்செடியில் ஒரு மலரைப் பறித்து அடிகளார் கையில் கொடுத்தால் போதும் என்ற முடிவுடன் இருந்தேன். . . . . . ; 22 - 11 - 64 - . -

பொழுது விடிந்து விட்டது. பொன்னுச்சாமி என் அறைக்கு வந்தார். - - - " .

32