பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'உங்கள் கடிதம் கிடைத்தது. விஜயகுமாரியும் உங்கள் கடிதத்தைப்பார்த்து மகிழ்ந்தாள்' என்ருர் எஸ். எஸ். ஆர்.

தேவர் சிலைத் திறப்புவிழா இளையாங்குடியில் நாடகத் தலைமை!’

"தேவர் சிலைத்திறப்புக்கு உங்களை யார் அ ழைத்தது?"

சசிவர்ணத்தேவர் நமக்கு யாராக இருந்தால் என்ன, தேவரின் காங்கிரஸ் எதிர்ப்பு உணர்ச்சியும், அவரது வீரமுழக் கமும் இவைகளைப்பற்றித் தானே நாம் பேசப் போகிருேம்.... உங்களுக்கு ஏதாவது பணம் கட்டட்டுமா?’ என்ருர்.

வேண்டாம்; நான் ஏற்கனவே பணம் கட்டியிருக்கிறேன். பின்னடி பார்த்துக்கொள்ளலாம் என்றேன்.

திரு. இராஜேந்திரன் அவர்களுடன் தோழர் தெட்சிணு மூர்த்தி வந்திருந்தார். மதியழகன் உடை அவருக்குச் சிறிது கலக்கத்தைக் கொடுத்தது. நண்பர் மதியழகன் சி. வகுப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

திரு. இராஜேந்திரன் அவர்கள் விடைபெறு முன்-நான் இரண்டு வேண்டுகோள்களைச் சமர்ப்பித்தேன். மதுரைச் சிறை யில் பூம்புகார்’ படத்தைப் போட்டுக் காண்பிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினேன். பல நூற்றுக்கணக்கான கைதி களின் வேண்டுகோளை நான் தீர்மான வடிவில் சொன்னேன். இன்னென்று மதுரைச்சிறைக்கு ஒரு ரேடியோ வாங்கிவைக்க வேண்டும் என்பது. இரண்டையும் இலட்சிய நடிகர் அவர்கள் நிறைவேற்றுவதாகச்சொன்னர். அவருக்கு கவனப்படுத்தினல் நிச்சயமாகச் செயல்படும் சுபாவமுள்ளவர்.

இலட்சிய நடிகர் வந்துபோனபிறகு சிறையில் சில குழப் பங்களை ஏற்படுத்தினர்கள் சில குழப்பவாதிகள்.

எஸ்.எஸ் ஆர். வத்தாரே உங்களை ஏன் பார்க்கவில்லை?" என்று, யார் யாரை எஸ்.எஸ்.ஆர். பார்க்கவில்லையோ அவர்க ளிடமெல்லாம் போய் விஷமூட்டினர்கள் சில ஆயுள் தண்ட னைக் கைதிகள். இதுபோலவே அண்ணு வந்துவிட்டுப்போன பொழுதும் கத்தரிக்கோல் போட்டார்கள். -

'டாங்கே வந்தார். பூபேஷ் குப்தா வந்தார். மோகன் குமாரமங்கலம் வந்தார், கம்யூனிஸ்டுக் கைதிகள் அனைவரை யும் அழைத்துப் பார்த்தார்கள். என்ன இருந்தாலும் கம்யூனிஸ் டுகள் கட்டுப்பாடு அலாதிதான்' என்ருர் ஒரு காங்கிரஸ் கைதி!

35.