பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிந்த ஒருவர், "இவர் நாயனத்தைப் பிடிப்பதிலேயே ஒரு மாற்றம் இருக்கிறதே? ராஜரத்தினம், கா ருக்கு றிச் சி எல்லோரும் வலக்கரத்தை மேலே வைத்து வாசிப்பார்கள் இவர் இடக்கரத்தை மேலே வைத்து வாசிக்கிருர்' என்ருர். பக்கத்தில் உட்கார்ந்திருந்த இன்னொருவருக்கு ஏதா வது பதில் சொல்ல வேண்டும் போல் தோன்றியது. உடனே சொன்னர், 'வாசிப்பது சின்னமெளலான அல்லவா எதிர்மதம் தானே?' என்ருர். சங்கீதம் கேட்கவந்த என் போன்ருேருக்கு இந்தச் சர்ச்சை மிகுந்த வேதனையைத் தந்தது. சங்கீதக்கச்சேரி களில் எழும் இது போன்ற சர்ச்சைக் கச்சேரிகள் சண்டையில் கொண்டுபோய் விடுவதுமுண்டு எல்லாத்துறைகளிலும் முட்டி மோதிச் சண்டையிடும் தென்னகம் ஒரு காலத்தில் சங்கீதத் துறையிலும் மோதிக்கொண்டிருக்கிறது. அன்று சிறையில் எனக்கு இந்த நினைவுகளெல்லாம் தலைதூக்கி எழுந்தன.

22-12-64

காலைக் கதிரொளி கொலைபாதகச் செய்திகளுடன் என் அறையுள்துழைந்தது. தனுஷ்கோடியில் கடல் கொந்தளித்து ஐநூறுக்கு மேற்பட்டவர்கள் பலியானர்கள் என்ற செய்தி சிறை யிலுள்ளோர் அனைவரின் உள்ளங்களையும் கவ்விக் கொண்டது. ஒரு சிற்றுாரில் ஒரே நாளில் இரண்டு பேர் இறந்தாலே நமக்கு வியப்பாகவும் வேதனையாகவும் தோன்றும் ஐநூறு பேர்! புகழ் பெற்ற பாம்பன் பாலம் தகர்ந்தது! தனுஷ்கோடி ரயில் நிலை யத்தைக்காணவில்லை பிரயாணிகள் ரயிலொன்று பாம்பனுக் கும் தனுஷ்கோடிக்கும் இடையில் கவிழ்ந்து கிடக்கிறது. அதில் சுற்றுலாப்போன மாணவர் குழு இருந்தது! அவர்களின் கதி தெரியவில்லை. இப்படியெல்லாம் செய்திகள் வானெலியிலும், பத்திரிகைகளிலும் ஒலித்த வண்ணமாயிருந்தன. 1989 - ல் இரண்டாவது உலகப் போர் காலத்தில் போலந்தின் மீது, ஹிட்லரின் மின்னல் தாக்குதல் ஏற்பட்ட போது கூட இப்படி அடுக்கடுக்கான தகவல்களை நாம் கேட்டதில்லை. கள்ளத் தோணி ஏறுபவன், கயிற்றில் தொங்குபவன், கையில் சட்டி ய்ேந்திப் பிச்சை எடுப்பவன்.இவர்கள் மீட்டும் தமிழர்களல்லர். கடலுக்குள் மூழ்கி கண்களை மூடுபவனும் இந்தஉலகில் தமிழன் தான் என்று முடிவாகி விட்டது. காமராஜர் விமானத்திலி ருந்து பார்த்துவிட்டு நமக்கு ஆறுதல் கூறியிருக்கிருர்! சாவு அதிகமில்லை என்று. அவரது பேச்சைப் படித்ததும் பொதுத் தேர்தல் நினைவுக்கு வந்தது. தி. மு.க. வா? ஐம்பது பேர் தானே! பரவாயில்லை கம்யூனிஸ்டா நான்கு பேர்கள் தானே! என்ன பிரமாதம் காங்கிரஸ்138 அல்லவா! என்று காமராஜர் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பேசினர். அதுபோலவே

40