பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொன்னர். நான் எப்போதும் அவரிடம் சுமுகமாகவும், சரள மாகவும் பேசக்கூடியவன். நாவ ல ர் நமக்குக் கிடைத்தப் புதையல் கலயம்! எப்ப்டி என்கிறீர்களா? .

நாவலர் முதன் முதலில் படித்துப்பட்டம் பெற்றவுடன் விருதுநகர்க் கல்லூரிக்கு விரிவுரையாளராகப் பணிபுரிய விண்ணப்பித்துக் கொண்டார். அது கிடைக்கவில்லை. அதன் பின்னர் அதே பணிக்கு மதுரை தியாகராசர் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். அங்கேயும் கிடைக்கவில்லை. ஆல்ை காலம் அவரைக் கோபுரத்தில் ஏற்றி வைத்தது. அதன் பின்னர் பல கல்லூரிகள் அவரை வருந்தியழைத்தன. எல்லாவற்றிற்கும் மேலாக, காசி சர்வகலாசாலையிலிருந்து கூட தமிழ்ப் பிரிவில் பணி புரிய அழைப்பு வந்தது. நாவலர் இணங்கவில்லை; ஒப்பவே இல்லை. மதுரை கருமுத்து தியாகராசன் ச்ெட்டியார் அவர்கள் அவரது தமிழ்நாடு இதழுக்கு ஆசிரியராக இருக்கும் படி கேட்டுக் கொண்டார். நாவலர் அதற்கும் இணங்கவில்லை. நாவலர் அவர்களது மனைவியாரே ஒருமுறை தனது கணவர் சிறை செல்லுவதை நினைத்து வருந்தி சிறை புகாத பொது வாழ்க்கையை மேற்கொள்ளும்படி மன்ருடினர். நாவலரை விரும்பி வெவ்வேறு துறைக்கு அழைத்தவர்களுக்கெல்லாம் அவர்களுக்குப்பதிலளிக்கும் பொறுப்பு அண்ணுவைச்சார்ந்தது என்று ஒரே வரியில் கூறிவிட்டார் நாவலர், . - く ・

தம்பி நெடுஞ்செழியன் என்னிடமிருப்பது ஜெயிலிலும் மிஞ்சிய நேரத்தில் ரயிலிலும் இரு ப் ப த ற்காகவே தவிர தொட்டில ஆட்டுவதற்கும் வட்டிலில் போடுவதை சாப்பிடு வதற்குமல்ல' என்று அண்ணு அவர்கள் ஒரே வாக்கியத்தில்

பதில் தந்து எல்லோரையும் பிரமிக்க வைத்தார்,

அந்த நாவலர் என்னோடு இருப்பதை நினைத்துப் பெருமித மடைந்தேன். எனக்கு இன்னொரு மகிழ்ச்சி, மதுரை வழக்கறி, ஞர்கள் மூவரும் நாவலருடன் கைதாகியிருந்ததுதான். அவர், களும் மதுரை மாவட்ட்ச் செயலாாளரும்தான் எனக்கு, வெளி யில் இருக்கும் போது அவர்கள்ை வாரம் ஒருமுறை சந்திக்கா,

விட்டால் எனக்குக் காய்ச்சல் வந்துவிடும்!

மனிதன் யாரிடமாவது நம்பிக்கையோடு அவனது, ரகசி. யங்களையும், மனச்சுமைகளையும் சொல்லித்தான் தீரவேண்டும். இல்லாவிட்டால் அவனுக்குப் பைத் தி யம் பிடித்து விடும். எனக்கு அவ்வாறு பைத்தியம் பிடிக்காமல் பாதுகாப்பவர்கள், மதுரை நண்பர்கள்தான். - - -

46