பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தப் பாழும் சர்க்கார் அவர்களை என்ைேடு நீண்ட நாள் வைத்தால் என்ன? வைக்கவில்லை! திடீரென்று விடுதலை செய்து விட்டார்கள். போலீசார் ஒருவகையில் நல்லவர்கள். அடிக்கடி பொதுமக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கி எதிர்க்கட்சிக் காரர்களைத் திடீர், திடீரென்று கைது செய்து ஆளுங்கட்சிக்குக் கெட்ட பெயரை உண்டாக்குவது போலீஸ் இலாகாதானே? வெள்ளையர் க | ல த் தி லே யு ம் அப்படித்தானே நடந்தது. தெலுங்குச் சீமை சஞ்சீவிரெட்டி எப்படித் தலைவரானர்? சிறை பிடிப்பார்கள்; மறுவாரம் திறந்து விடுவார்கள்; முதல் வாசலில் விடுதலையாகி தலைவாசலுக்கு வருவதற்குள் அவரை இன்ைெரு போலீஸ் வேனில் ஏற்றி விடுவார்கள் அந்த டிராஜடிகளெல்லாம் இந்த காங்கிரசார் ஆட்சியில் பிச்சை வாங்க வேண்டும் போல் வந்து விட்டதே நிலைமை! -

இதற்கிடையில் 25-2-65ல் தமிழ் நாடெங்கும் உள்ள மாணவர்கள் இந்தி ஆட்சிமொழியாவதை எதிர்த்து கண்டண ஊர்வலம் நடத்தத் தொடங்கினர்கள். மதுரையிலும் அந்த ஊர்வல ஏற்பாடு இருந்தது, ஊர்வலம் வடக்குமாசி வீதிக்குள் வந்து கொண்டிருந்தபோது வழியில் இருந்த காங்கிரஸ்காரி யாலயத்திற்குள்ளிருந்து சிலர் அரிவாள்களுடனும், கத்திகளுடனும் வெளிக்கிளம்பி மாணவர்களைத் தாக்கியும் வெட்டியும் கல்லெறிந்தும் அராஜகம் விளைவித்தார்கள். மாணவர்கள் காங்கிரஸ் ரவுடிகளால் தாக்கப்பட்டதை திட்டமிட்ட வெறிச் செயல் என்று தமிழ்நாட்டுப் பத்திரிகைகளெல்லாம் எழுதிக்குவித்தன. ஏனெனில் ஊர்வலத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்பே மதுரை இளைஞர் காங்கிரஸ் தளபதி வீரய்யா என்பவர் இந்தி ஆட்சிமொழியாவதை எதிர்த்து துக்கதினம் கொண்டாடினல், ஊர்வலம் நடத்தில்ை வெட்டுவோம், குத்துவோம், என்று வெளிப்படையாக பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட் டிருந்தார். அவர் சொன்னபடி திறமை (?) யாகச் செய்து முடித்தார். அன்றைய நிகழ்ச்சியில் கத்தியைத் தூக்கி வந்த காங்கிரஸ் தளபதிகளில் அவரும் ஒருவர் என்று மறுநாள் பத்தி ரிகைகளில் செய்தி வெளியாகி இருந்தது. உயிருக்கு மன்ருடும் போது கோ ைழ யு ம் புலியாகி விடுவது வழக்கமல்லவா? மாணவர்கள் சினந்தெழுந்தார்கள்! தீ வடக்குமாசி வீதி எங்கும் தி ஜீப் எரிந்தது, பந்தல்கள் சாம்பலாயின கார்கள் நொருங்கின என்றெல்லாம் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.

சங்கம் வளர்த்த மதுரை இட்ட தீ மாநில மெங்கும் பரவியது. சிற்றுார், பேரூர், பட்டி, தொட்டி, எங்கும் மொழிப் போர் தொடங்கி விட்டது. எங்கும் தீ பரவி விட்டது. ரயில் பெட்டி, ரயில்வே ஸ்டேஷன், சர்க்கார் பஸ்கள், பணிமனைகள்

47