பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவரது எழுத்தும் பேச்சும்தான் காரணம்' என்ருர் சிலர். . -

"சட்டசபை மார்ச்சில் கூடப்போகிறது, அவர் இருந்தால் அமைச்சர்களைப் பிடித்து வளைத்துப் பேசுவார்' என்பதற்காகத் தான் என்ருர்கள் வேறு சிலர்.

'தர்மபுரி தேர்தலை முன்னிட்டுக் கைதாகியிருக்கலாம்:இப்படிச் சிலர்.

கைதுக்குக் காரணம் எதுவாக இருந்தாலும் மொத்தத்தில் சர்க்கார் அவரை வெளியில் விட்டு வைத்தால் தங்களுக்கு அ ன ர் த் த ம் என்று கருதியிருப்பது மட்டும் உண்மையாகி விட்டது. - - -

இரவு 6-30 மணிக்கு நான் லாக்கப்புக்குப் போனேன். சிறை சூப்ரன்டெண்ட், ஜெயிலர், ஹெட்வார்டர் முதலானுேர் பரபரப்பாக இருந்தார்கள், சிறையில் எல்லாமே மர்மமாகத் தான் இருக்கும்.

இரண்டு கைதிகள்-ஒருவர் மெத்தையையும், அடுத்தவர் க ட் டி லை யு ம் தூக்கிக்கொண்டு வெளிக் கொட்டடிக்குப் போளுர்கள். அப்போது மணி எட்டு -

"யாரும் புதிதாக பி. வகுப்புக்கு வருகிருள்களா?" என்று அறைக்குள்ளிருந்தபடியே கேட்டேன். •

முக்கியமானவர் வருகிருராம் ിൽ முதலாளியாம்' என்ருர் அந்தக் கைதி-மெத்தையை தலையில் வைத்த

彗母, - -

எனக்குக் கொஞ்சம் திருப்தியாக இருந்தது - ஏனெனில் மில் முதலாளி என்றதும் கருமுத்து தியாகராசன் செட்டியாராகத்தானிருக்கும் என்று நான் நினைத்தேன். அவர் கைதால்ை தமிழகத்திற்கு லாபம்தான்! பணக்காரரின் கோபம் ஐந்து அக்கிரமக்காரர்களையாவது வீழ்த்தாதோ? காங்கிரசுக்கு தலை ஆடிவிட்டது என்று நினைத்து நான் மகிழ்ந்தேன்.

இப்போது இரவு 9 மணி. சிறைவாசல் பக்கமாக இருந்து ஒருவார்டர் வந்தார். "ஏதாவது தகவல் தெரியுமா?’ என்று கேட்டேன். -

கப் சிப் என்று இருங்கள். டி.எம்.ஒ., டி.எஸ்.பி. , வயர்லஸ், ஆம்புலன்ஸ் எல்லாம்........ சிறை வாசலில்' என்ருர்,

53