பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன இருந்தாலும் பணக்காரர் என்ருல் சர்க்காரே பயப்படத்தான் செய்கிறது' என்று நினைத்தேன். -

இப்போது மணி 9-30. இன்னெரு வார்டர் என் அறைப் பக்கமாக வந்தார், -

சார், முத்துராமலிங்கத் தேவருக்குக் கூட இவ்வளவு கெடுபிடி கிடையாது சார் அடேயப்பா சிறையைச் சுற்றி ஆயுதம் தாங்கிய போலீசை நிறுத்தியிருக்கிருர்கள். போலீஸ் எக்கச்சக்கம்!’ என்ருர் வார்டர்.

"பெரிய பணக்காரரல்லவா!' என்றேன்.

"பணக்காரரா? எவ்வளவு தேரும்? ஒரு பத்து லட்சம்

தேருமா?’’

இலட்சமா? எந்த மூலக்கு? அவர் கோடீஸ்வரன்!” என்றேன். - -

"கதை எழுதினல் கோடிக் கணக்கிலா கொடுப்பார்கள்?’’ என்ருர் வார்டர். -

"கதையா? தியாகராஜன் செட்டியாருக்கு அது கூடத் தெரியுமா?’ என்றேன். . . . -

'என்ன சார் வந்திருப்பது யாருன்னு இன்னும் தெரியாதா? நம்ம கலைஞர் சார் வந்திருக்காரு வார்டர் உரிமை யோடு சொன்னர். என்ல்ை நம்பவே முடியவில்லை. நேற்று இரவு சென் னே யி ல் கைது செய்து இன்று இரவு மதுரைச் சிறைக்குக் கொண்டுவரக் காரணம்? எனக்குச் சுயநலம் - கலைஞரைப் பாதுகாப்புக் கைதியாக இங்கேதான் வைக்கப் போகிருர்கள்; நமக்கு நல்ல வாய்ப்புதான் என்று மகிழ்ந்தேன்.

இப்போது மன்னி பத்து வெளிக் கொட்ட டி யிலிருந்த நண்பர் ராஜாங்கம் எம். எல். ஏ. அவர்களை ஒரு சந்து வழியாக பாதுகாப்புட்ன் ரகசியமாக சிறை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போளுர்கள். எனக்கு ஒர்ே குழப்பம்! கையில்லாத ஊமையினைப் போல் க்ம்பியைப் பிடித்துக் கொண்டே இரவு 12 மணி வரை நின்றேன், - - . • . . -

19-2-65一。

பொழுது விடிந்தது. காலை 5.30 மணிக்கு என் அறையைத்

திறந்த வார்டர் ஒரு திடுக்கிடும் தகவலைச் சொன்னர். "காலை யிலேயே கலைஞரை பாளையங்கோட்டைக்குக் கொண்டுபோய் விட்டார்கள்: என்ருர் எதை நம்புவது? -: , ,

54