பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலை எட்டு மணிக்குமேல்தான் சில விவரங்கள் எனக்குக் கிடைத்தன.

கலைஞர் வந்ததும் அவரை, முன்கூட்டியே ஏற்பாடு செய்த படி மாமரத்துக் கொட்டடிக்குக் கூட்டிப்போயிருக்கிருர்கள். ஒரு பெட்டி, ஒரு ஜமுக்காளம் தலையனை இவ ற் று டன் கலைஞர் வந்தாராம் மிகவும் பலவீனமடைந்து இருந்தாராம் வரும் வழியிலேயே திண்டுக்கல் மருத்துவமனையில் கொஞ்சம் தங்கி விட்டுத்தான் வந்திருக்கிருர், மதுர்ைக்கு வந்ததும் மதுரை சர்க்கார் மருத்துவமனை டாக்டர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது . ‘. -

கலைஞர் அவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த இடத்தில் "அதிகமாக மூட்டைப் பூச்சி இருப்பதால் நான் இங்கே படுக்க முடியாது' என்று சொல்லியிருக்கிருர், சிறை நிர்வாகம் விசித்திர மான சுபாவம் கொண்டது. நாம் கெஞ்சில்ை அது மிஞ்சும் நாம் மிஞ்சில்ை அது கெஞ்சும் எல்லாச் சிறைகளிலும் இந்த நாடகத்தைப் பார்க்கலாம். *

கலைஞர் விடவில்லை. தென்னரசு இருக்கும் இடத்திற்கு என்னைக் கொண்டு போங்கள் என்று கேட்டிருக்கிருர்,

"அவர் தண்டிக்கப்பட்டவர்; நீ ங் க ள் அங்கு போகக் கூடாதே' என்ருராம் சூப்ரன்டெண்ட். --

- "அப்படியால்ை தென்னரசை இங்கே கொண்டு வாருங்கள்' என்று கலைஞர் அடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிருர்.

சூப்ரெண்டெண்டுக்கு ஆட்டம் கண்டுவிட்டது. உடனே அவர் ராஜாங்கம் இருந்த கொட்டடிக்குப் போய், என்ன மிஸ்டர் ராஜாங்கம் உங்களுக்கு தலைவலி என்றீர்களே! வேண்டு மாளுல் இன்று ஆஸ்பத்திரி வார்டில் படுத்துக்கொள்ளுங்கள்' என்று அன்பாகப் பேசுவதுபோல் அவரிடம் பேசி கோட்டைச் சுவர் ஒரமாக இருட்டில் ராஜாங்கத்தைச் சிறை மருத்துவ மனைக்கு அனுப்பிவிட்டு அந்த அறைக்கு கலைஞரை இன்னொரு முக்கிய வழியாக அழைத்துப் போளுர்களாம். கலைஞருக்குக் கோபம் வந்திருக்கிறது. உங்களுக்கு ஏன் இவ்வளவு சிரமம்? ஏதாவது மருந்தைக் கொடுத்து என்னைக் கொன்றுவிடுங்களேன்' என்ருராம். அவ்வளவுதான் அதிகாரிகள் அதிர்ந்து விட்டார்கள்,

ராஜாங்கம் அறையிள் ஆ ப் பி ல், பி ஸ் க ட் எல்லாம் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்தனவாம்!

55