பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினைந்து நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம். முத்து அவர். களோடு பி. எஸ். மணியம், பி. திருஞானம், மைனர் மோசஸ் எழுகடல் இராமநாதன் முதலானேர் வந்தார்கள்.

முத்துவைப் பார்த்ததும் எனக்கு ஒரு புத்துணர்ச்சி பூத்தது.

அன்று மாலை ராஜாங்கம் என்னை ஆஸ்பத்திரியில் சந்தித்தார். -

"சார் இன்றுதான் எனக்கு தைரியம் வந்தது' என்ருர்,

"ஏன் ஏதாவது டானிக் சாப்பிட்டீர்களா?' என்றேன்.

"முத்துவைப் பார்த்தபிற்கு எனக்கு தெம்பு வந்துவிட்டது'!

என்ருர்,

அப்போது நான் அதை ஆச்சரியத்துடன் கேட்கவில்லை. திரு. முத்து அவர்களின் பேச்சு ஒரு வீரக்குரல்; அவரது நடவடிக்கைகள் அலெக்ஸாண்டரின் செய்கைகளுக்கு ஈடானவை என்று ஏற்கெனவே நான் ஏற்றுக்கொண்டவை. -

20-3-65

எனக்குக் காதுவலி வந்திருந்தது. பெரிய ஆஸ்பத்திரிக்குப் போய் பெரிய டாக்டரிடம் கா ன் பி க் க வேண்டுமென்று எண்ணினேன். சிறை அதிகாரி அனுமதியளித்தார்.

காலை 9 மணிக்கு நான் பெரிய ஆஸ்பத்திரிக்குப் போனேன் காது, கண், தொண்டை முதலிய கோளாறுகளுக்கு ஸ்பெஷ லிஸ்ட்டாக இருப்பவர் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் மருமகன்-காமேசுவரன் அவர் பெயர். நோயாளிகளிடம் அன்புடன் பேசி ஆதரவு காட்டுவதில் காமேசுவரனுக்கு இணையானவர் அவர்தான். --- - -

அன்று மருத்துவமனைக்கு பி.எஸ். மணியம், தா. கிருஷ்ணின் மு. தர்மன், ஏழுகடல் இராமனுதன், திருஞானம் மற்றும் ஏராளமான நண்பர்கள் வந்திருந்தார்கள். நண்பர் மணியம்,

அறிஞர் அண்ணு அவர்கள் 25-3-65 ம் தேதி உங்களைப் பார்க்க மதுரை வருகிருர்; அதன்பின்னர் பாளையங்கோட் டைக்குப் போகிருர் கலைஞரைப் பார்ப்பதற்காக! இண்டர் வியூவுக்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்' என்ருர். அண்ணு வின் வருகையை எதிர்பார்த்திருந்தேன். இந்தத் தகவலை நண்பர் ராஜாங்கத்திடமும் சொல்லியிருந்தேன். 25 - 3 - 65

காலை 11 மணியளவில் அறிஞர் அண்ணு அவர்களும், மதுரைமுத்து அவர்களும் சிறைவாயிலுக்கு வந்து விட்டதாக

57.