பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சிறுகதை மன்னர் என்று நாடறிந்த பெருமைக்குரிய எனது அன்புக்குரிய நண்பர் எஸ். எஸ். தென்னரசு அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களிலே ஒருவர். சிந்தாமணியாக வளர் ந் த சிறு வயது முதல் பேரறிஞர் அண்ணுவிடம் ஈடுபாடு கொண்டவராக விளங்கி, தென்னரசு பெயர் கொண்டவராய் நாட்டுக்கு அறிமுகமாகி, கலைஞரின் நெருக்கமான தோழராகச் செயற்பட்டு, எம்மனை யோரின் நம்பிக்கைக்குரிய தென்பாண்டி மண்டலத்தின் முத்த தளபதியாகச் செயற்படுகிருர் இந்நாள். : r : • ".

செய்திகளைத் திரட்டுவதிலும், கதைக் கரு ஒன்று கிடைத் தால் கற்பனையுடன் இணைத்துக் கதையா, வடிப்பதிலும் வல்லவர். அவர் எழுதியுள்ள நினைவுக் குறிப்பேடுதான் பெண்ணில்லாத ஊரில்ே என்னும் தலைப்பில் வெளிவந் துள்ளது. . . * . "

ஆண்களே இல்லாத ஒரு கோதைத் திவு பந்திய ஒரு கற்பனைச் சித்திரம் வ. ரா. அவர்களால் பல ஆண்டுகள் முன்பு வரையப்பட்டது. . .

பெண்களின் உரிமை வாழ்வு - ஆணினத்தின் வரையரை களுக்கு ஆட்படாமல் வாழ்ந்தால், எப்படி அமையும் என்பது அதன் நோக்கமாகலாம், இந்த நூலோ . பெண்களே இல் லாத - காணுத ஓர் இடத்தில் -பல திங்கள் தொடர்ந்து வாழ்ந் திருந்த நிலையை விவரிப்பதற்கு இந்தத் தலைப்பைக் கொன் டுள்ளது. ‘. . . . . . .

ஆணும் பெண்ணும் காதல் கூட்டத்தில் களிப்புரு விடினும் ஆண்களும் பெண்களுமாக வாழும் உலக வாழ்வில்தான் இருபால் மக்களும் வாழ்வின் சலிப்பிலிருந்து விடுபடுகின்றனர் என்பது உலகியல் அறித்தோர் உணர்ந்த உண்மை. மாருகப் பெண்களையே பார்க்காத ஒரிடம் - இயற்கைக்கே மாருன ஒரு சூழல் - எந்த அளவு வறண்ட-வெறுப்பான மனப்பான்மை யைத் தோற்றுவிக்கும்? அப்படிப்பட்ட இடந்தான் சிற்ைச் சாலை! அந்தச் சிறைச்சாலையில், தான் வாழ்ந்திருந்த நாட்களில் அவரது உள்ளத்தைத் தொட்டு வருடிய-வருத்திய நிகழ்ச்சிகளை விவரிப்பதே இந்த ஏடு. . . * - - - . . . . . .