பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யிருந்தது. என்ளுேடு வேலைபார்த்துக் கொண்டிருந்த நாற்பது பேரும் திகைத்துப் போய் எழுந்து நின்ருர்கள். டாக்டர் என்ருல் சிறையில் அதிக மரியாதை உண்டு சூப்ரெண்டெண்டுக்கு அடுத்த பொறுப்பு டாக்டர் பொறுப்பு சிலநேரங்களில் சூப்ரெண்டெண்டுக்கே டாக்டர் தயவு தேவைப்படும்!

டாக்டர் வந்ததும் எங்கே தென்னரசு?" என்ருர், - “வணக்கம்!" என்றேன். எப்போதும் அவருட்ன் நான் சரளமாகப் பேசுவதுண்டு.

  • கொண்டுவாங்க பார்ப்போம்! எந்த இடத்தில் கடிச்சுது? எத்தனை மணிக்கு நடந்தது?’ டாக்டர் இப்படி அடுக்கிக் கொண்டே போர்ை. . . ‘. .

எனக்கு எதுவும் புரியவில்லை. சிரித்தேன்.

என்னசார்! யாரோ உங்களை ஏமாற்றப் பார்த்திருக் கிருர்களா?' என்றேன்.

கணபதிதானே சொன்னர்? என்ன சொன்னர் சார்? கேட்டேன் நான்.

தென்னரசுக்கு பாம்பு கடித்துவிட்டது. மயங்கி மயங்கி உட்காருகிருர். இங்கேயே இருங்கள் என்று சொன்னேன். மறுத்து விட்டுப்போய்விட்டார் என்று சொன்னர். நான் ஓடி

எல்லோருக்கும் பேரதிர்ச்சியாய் போய்விட்டது. இதெல்லாம் ஒரு விளையாட்டா என்று கூட நான் நினைத்தேன். கணபதி அவர்களும் ஒரு டாக்டர். ஒரு டாக்டர் இன்னொரு டாக்டரிடம் அதுவும் என் பெயரைப் பயன்படுத்தி விளையாடலாமா?

வேலைவிட்டு அறைக்கு வரும் வழியில் என்னைச்சந்தித்த வர்களெல்லாம் கேட்டார்கள், கவலையுடன் கேட்டார்கள். என்னங்க பாம்பு கடித்துவிட்டதாமே!" என்று. எனக்கு வெட்கமாகக் கூடப்போய்விட்டது. பாம்பு கடித்த செய்தி பரவிவிட்டது. சிறையில் பரபரப்பே ஏற்பட்டு விட்டது.

சூப்பரெண்டெண்ட், டாக்டர் கணபதி அவர்களை இது பற்றிக் கேட்டார். டாக்டர் கணபதி குளுமையாகப் பதில், சொன்னர். இன்று ஏப்ரல் முதல் தேதி சார்!. மிஸ்டர் ராமா, னுசத்தை ஏப்ரல்பூல் ஆக்கிப் பார்த்தேன்."

சூப்ரெண்டெண்ட் இதுகேட்டு பலமாகச்சிரித்தார். அதற்கு முன் சூப்ரெண்டெண்ட் ஒரு போதும் அப்படிச் சிரித்ததில்லை என்று டாக்டர் கணபதி என்னிடம் சொன்னர்.

59