பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைதிகள் அண்ணுவையே வாழ்த்தினர்கள். அண்ணுவுக்கு முதலில் அனுமதியில்லை என்று சொன்னதால்தான் அவரது முயற்சியால் புது உத்தரவு ரத்தாகியிருக்கிறது என்பது அவர்களது எண்ணம். அதுதான் சரியான எண்ணமும் கூட!

9 - 4 - 65

என் தம்பியிடமிருந்து கடிதம் வந்தது. 5-4-65 மாலை அண்ணு அவர்கள் எனது இல்லத்திற்கு வந்ததாகவும், எனது குழந்தை இளவரசியுடன் படம் எடுத்துக்கொண்டதாகவும் அதில் எழுதியிருந்தான். ஊரில் பெருங்கூட்டம் கூடியிருந்த தாகவும், பலத்த போலிஸ் பந்தோபஸ்து ப்ோட்டிருந்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான். 12-4-65 ". . . . . . .

மாதவன், பில்லப்பன் முதலானேர் என்னைச் சந்தித்துப் பேசினர்கள். . . . . ." t -

16-4-65

ரேடியோவில் மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்று ஒலித்தது: கலைஞர் விடுதலையாகி விட்டார். தர்மபுரி தேர்தலில் தி. மு. க. வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் வாங்கி வைத்திருந்த மிட்டாய்களை கலைஞர் விடுதலைக்காகச் சிறையில் வழங்கினேன்.

17-4-65

சாத்தூர் வரதராசன் விடுதலையானர். அவரை வரவேற்க தோழர் மாதவன் M.L.A. அருப்புக்கோட்டை சிவ. சண்முக சுந்தரம், விருதுநகர் சங்கர பாண்டியன் முதலியோர் வெளியில் காத்திருப்பதாகச் சொன்னர்கள். --

நான் நண்பர்.வரதராசனை கோட்டை வாசல்வரை சென்று வழியனுப்பிவைத்தேன். எனக்கும் வெளியில் நின்ற நமது நண்பர்களுக்கும் இடையில் பத்தடி தூரம் தான் இருக்கும். இருந்தாலும் நான் கோட்டைக்கு உள்ளே சுவர் ஓரத்தில் மிக அருகில் வந்து வழியனுப்புவது அவர்களுக்குத் தெரியாது. இடையில் மதில்! இதற்குப் பெயர்தான் சிறை. -

18-4-65 -

... " ஊராட்சித் தலைவர்கள் தேர்தல் தொடங்கின. அதன் முடிவுகளைப் பத்திரிகைகளில் பார்த்துக் கொண்டிருப்பதிலேயே நேரம் போய்க் கொண்டிருந்தது. சிறை ஒரு வினேதமான

61