பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயலாளர் சொன்ன தகவலுக்கும் இப்போது கிடைத்த தகவலுக்கும் தொடர்பில்லாமலிருந்தது. ஒருவேளை வார்டர்கள் அண்ணுவைத் தெரியாமல் சொல்லுகிருர்களோ என்று கூட நினைத்தேன். அரைமணி நேரத்திற்குப்பிறகு, அண்ணு கார் மூல மாக சென்னையிலிருந்து அதிகாலையிலேயே வந்து விட்டார்கள்’’ என்று மாவட்டச் செயலாளர் முத்து அவர்கள் சொல்லியனுப்பியிருந்தார்கள்.

நான் அதற்குப்பிறகு சிறை அதிகாரியை சந்தித்து என்னை 9 மணிக்கே விடுதலை செய்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். நான் எவ்வளவு சீக்சிரமாக சிறைச்சாலையை விட்டுப் போகிறேனே அவ்வளவு சீக்கிரம் தனக்குப் பொறுப்பு விலகும் என்று கருதிய சிறை அதிகாரி எந்த மறுப்பும் செர்ல்லாமல் ஒப்புக்கொண்டார். -

நான் விடுதலை பெறுவதற்குப் பத்து, நிமிடங்களுக்கு முன்னல் ஒவ்வொரு பிளாக்குக்கும் சென்று எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டேன். கடைசியாக நான் இருந்த பிளாக்குக்கு வந்து தனித்தனியாக ஒவ்வொருவரிட்மும் விடை பெற்றுக்கொண்டேன். முதுகுளத்தூர் நண்பர்கள் கஜேந்திர பாண்டியன், கந்தசாமிப்பாண்டியன் இருவரும் கண்கலங்கி ஞர்கள். அவர்களை விட்டுப் பிரிவது எனக்குத் துயரமாகத்தான் இருந்தது. எனக்கு அவர்கள் அவ்வளவு உதவி செய்திருக் கிருர்கள். - - - - - . -

சரியாக 9 மணிக்கு விடுதலைப் புத்தகத்தில் நான் கையெழு திட்டேன். கோட்டை வாசலின் சிறிய கதவு எனக்காகத் திறக்கப்பட்டது. கோட்டைக்கு உள்ளே இருக்கும் திறந்த வெளியில் அறிஞர் அண்ணு, கலைஞர் கருணுநிதி, மதியழகன், சத்தியவாணிமுத்து, என். வி. நடராசன், மதுரை மாவட்டிச் செயலாளர் எஸ். முத்து, திருச்சி மாவட்டச் செயலாளர் அன்பில் தர்மலிங்கம், செ. மாதவன், எம்.எல்.ஏ., நண்பர்பில்லப்பன் நண்பர் பி. திருஞானம், மாங்குடி மதியழகன் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கையில் மாலையுடன் வரிசையாக நின்றர்கள், வெளி வாசலில் போலீஸ் க ட் டு க் கா வலை மீறிக்கொண்டு. ஆயிரக்கணக்காண கழகத் தோழர்கள் உள்ளே வர எத்தனித்துக்கொண்டிருந்தார்கள். நான் வெளியே வந்ததும், அண்ணு இருக்குமிடத்திற்குவந்து வணங்கினேன். எனக்குப் பிடித்தமான மல்லிகைப்பூ மாலையை என் கழுத்தில் அண்ணு அவர்கள் அணிவித்தார்கள். அதைத் தொடர்ந்து கலைஞர் அவர்களும் மற்றவர்களும் மலர் மாலைகளை அணிவித்தார்கள்,

72