பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தச் சடங்கு முடிந்ததும் தலைவர்கள் நகருக்குள் சென்று. விட்டார்கள். மதுரை மாவட்டச் செயலாளர் என்னை அந்த, இடத்திலிருந்து பொதுமக்கள் திரண்டிருந்த இட த் து க் கு அழைத்து வந்தார். கழகத் தோழர்களின் அன்பை என்னுல். தாங்க முடியவில்லை. அளவுக்கு மீறில்ை அன்பும் ஒரு தொல்லை, தான் மயக்கம் வரும் அளவிற்கு கழகத் தோழர்கள் என்னை, நெருக்கி திணற அடித்து விட்டார்கள். நானும் மதுரை மாவட்டச் செயலாளரும் ஆயிரக்கணக்கானேர் பின் தொடர அழகரடி வழியாக நடந்து வந்தோம். ஹார்வி மில் ரயில்வே, கேட் வரை நடந்து வந்து வழி நெடுக கொடிகளை ஏற்றிவைத்து, விட்டு அங்கிருந்து கார் மூலமாக கட்சி அலுவலகத்திற்கு வந்தோம். மதுரை மாவட்டச் செயலாளர் முத்து அவர்கள் அன்று செய்த விடுதலை ஏற்பாட்டை என்னுல் என்றும் மறக்க,

முடியாது. . . . .” A .

மா லை யில் தல்லாக்குளத்தில் பாராட்டுக் கூட்டம். ஐம்பதாயிரம் பேருக்குமேல் திரண்டிருந்தார்கள். மதுரை மாவட்டச் செயலாளர் எஸ். முத்து அவர்கள்தான் கூட்டத் தலைவர். மதியழகன், சத்தியவாணிமுத்து, என். வி. நடராஜன் முதலானேர் பேசிய பிறகு அருமைத் தலைவர் கலைஞர் அவர்கள் பேசிஞர்கள். தென்பாண்டி நாட்டில் வீர்மாக வாழ்ந்து காட்டிய பெரிய மருது, சின்ன மருது, என்ற வீர சகோதரர்கள். போல் கழக வரலாற்றில் அதே பாண்டிய நாட்டில் மதுரை முத்து அவர்கள் பெரிய மருது ஆகவும், நண்பர் தென்னரசு அவர்கள் சின்ன மருது ஆகவும் இணைந்திருந்து பணியாற்றி, எடுத்த காரியங்களில் வெற்றியை ஈட்டி கழகத்திற்குப் பெருமை. தேடித்தருகிருர்கள்' என்று பாராட்டினர். அடுத்துநான் நன்றி, சொல்ல வேண்டிவந்தது. என்னுடைய பேச்சில், பழைய சம்பவங்களை அண்ணு அவர்களின் கவனத்திற்குக் கொண்டு. வந்தேன். கடைசியாக அண்ணு அவர்கள் பேசினர்கள். அவர், பேசுகிறபோது "ந ண் படர் தென்னரசு இருக்கக்கூடாத இடங்களில் எல்லாம் இருந்து தப்பித்து கெட்டுப் போகாமல் என்கைக்கு வந்தவர். அவருடைய சகிப்புத்தன்மையும் இனிய இயல்புகளும்தான் அவரை இந்த நிலைக்குக்கொண்டு வந்தன. மதுரை என்ருல் முத்துவின் பெயர் நினைவுக்கு வருவதுபோல், இராமநாதபுரம் என்ருல் த்ென்னரசுவின் பெயர் நினைவுக்குவர ஆரம்பித்திருக்கிறது. அவருட்ைய காலத்தில்தான் அந்த மாவட்டத்தில் கட்சி-கட்டுக்கோப்பாக வளர்ந்தது என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை'. என்ருர். கூட்டம் அதோடு முடிந்தது. மறுநாள் அண்ணு அவர்கள் எனது சொந்த ஊரான திருக்கோட்டியூருக்கு வர ஒப்புக்கொண்டார். மறுநாள் பகல் 3 மணிக்குமேல் மதுரையை விட்டுக்கிளம்பி, சிங்கம்புணரி,

73