பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1975 ஜூன் மாதம் நான் மலேசியாவில் இருந்தேன். அப்போது இந்தியாவில் எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டு விட்டதாகத் தகவல் கிடைத்தது அரசியல் சூழ்நிலை - வெப்பம் மிகுந்ததாக ஆகிவிடக்கூடும் என நினைத்து நான் என்னுடைய பயணத்தை முடித்துக்கொண்டு உடனடியாகத் தமிழகத்திற்குத் திரும்பினேன்.

1972ல் தொடங்கிய தென்னரசு’’ என்ற எனது வாரப் பத்திரிகை மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. எமெர் ஜென்சி அறிவிக்கப்பட்டவுடன் ஒவ்வொரு கட்டுரையையும் சென்னையிலுள்ள தணிக்கை அதிகாரி பார்வையிட்டப் பிறகு தான் வெளியிடப்பட வேண்டுமென்று எனக்கு அரசாங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த விதிகளை மீருமல் நிதான மாகவும், எ ச்சரிக் கை யாக வு ம் ஆறு மாத காலம் எனது பத்திரிகை தொடர்ந்து நடந்தது. திடீரென்று டில்லியிலிருந்து எனக்கு ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதில்உங்களுடைய பத்திரிகையில் வெளியாகும், மத்திய சர்க்கார் பற்றிய விமர் சனக் கட்டுரைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்' என்று அந்தக் கட்டளையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆளுல் நான் கட்டுரையை நிறுத்தவில்லை. ஏனென்ருல் அது ஏற்கனவே வெளியான ஆங்கிலப் புத்தகத்திலிருந்து மொழி பெயர்த்து எழுதப்பட்டவைதான். ஆகவே கட்டளை பிறப்பித்த தம்பிருன் களுக்கு இது மொழி பெயர்ப்புக் கட்டுரைதான் என்று பதில் எழுதி விட்டுத் தொடர்ந்து கட்டுரையை வெளியிட்டு வந்தேன். திடீரென்று ஒரு நாள் 'உங்களுடைய அச்சகத்தைப் பறிமுதல் செய்வதற்காக நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிருேம் -என்று மற்ருெரு தாக்கிது நான் அதற்குமேல் எதுவும் கூறிக்கொள்ள விரும்பாமல் பத்திரிக்கையை நிறுத்தி விட்டதாகஅறிவித்துவிட்டேன். 1975 டிசம்பரோடு என்னுடைய பத்திரிகைக்கு அரசாங்கத்திலிருந்து எந்தத்தகவலும் இல்லை.

75