பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1976 பிறந்தது. ஜனவரி மாதம் 16-ம் தேதி திண்டுக்கல்லில் நண்டபெற்ற தி. மு. க. பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நான் திண்டுக்கல்லுக்குப்போய் இருந்தேன். இரவு 8 மணி அளவில் எனக்கு இலேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. கூட்டத்தில் அதிக நேரம் பேசாமல் இரவு 9 மணி அளவில் கூட்டத்தை முடித்துக் கொண்டு மதுரைக்குத் திரும்பி விட்டேன்.

பொழுது விடிந்தது. எனக்கு உடல்நிலை சீராகவில்லை. எனது மனைவிக்கு மருத்துவப் பயிற்சி இருந்ததால் எனது உடல் நிலையைப் பற்றிக் கவலைப்பட்டாள். காலை 4 மணியளவில் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. நேரம் செல்லச் செல்ல வலி அதிகம்ானது. உடனடியாக பத்மா கிளினிக்குக்கு போன் செய்து டாக்ட்ர் சீனிவாசனை வரவழைத்தார். அவர் வருவதற்கும் எனக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கும் சரியாக இருந்தது. ஒரு யானை என் நெஞ்சில் ஏறி மிதிப்பதுபோல் இருந்தது. உரிய நேரத்தில் டாக்டர் வந்து விட்டதால் எனக்கு மயக்க ஊசி போட்டு உடனடியாக என்னை அவரது காரில் வைத்து பத்மா கிளினிக்குக்குக் கொண்டுபோய் விட்டார்கள். பத்து நாட்கள் சிகிச்சைப் பெற்றேன். இலேசான ம்ாரடைப்பு, ஒழுங்காகவும் கொஞ்சமாகவும் உணவை உட்கொண்டால் சரியாகிவிடும் என்று டாக்டர் மேலும் பல ஆலோசனைகளைக் கூறினர்.

ஜனவரி 31-ம் நாள்வரை அங்கு இருப்பதாக ஏற்பாடு செய்து இருந்தேன். ஆனல் ஜனவரி 30-ம் தேதியே தமிழக அரசு கலைக்கப்பட்டு விட்டது. மருத்துவமனையிலிருந்த எனக்கு இந்தத் தகவல் அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் நான் இதைப் பெரிதாக மதிக்கவில்லை. இரவு 11 மணியளவில் தல்லா குளம் டி. எஸ். பி. ரவி ஆறுமுகமும் ள்ன்னைக் கைதுசெய்வதற்கு மற்ருெரு டி. எஸ். பி. முகம்மது அலி அவர்களும் போலிஸ் படையோடு கிளினிக்குக்குள் நுழைந்தார்கள். அவர்கள் என்னைச் சந்தித்து உடல்நலம் விசாரிக்க வந்திருக்கிறார்கள் என்றுதான் முதலில் நினைத்தேன். அவர்களைச் சந்தித்த பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் பேட்டியிலிருந்து என்னைக் கைது செய்ய வந்திருக்கிருர்கள் என்று தெரிந்து கொண்டேன். அவர்கள் எ னக் கு அறிமுகம் ஆனவர்கள் என்பதால் எடுத்த எடுப்பில் சொல்வதற்குச் சங்கடப்பட்டார்கள் பிறகு பேச்சுவார்த்தை முடிந்தப் பின்னர் புறப்படலாமா'என்று கேட்டார்கள். ஆனால், டாக்ட்ர். சீனிவாசன் அவர்கள், இந்தச் சூழ்நிலையில் என்னைச் சிறைக்கு அனுப்பமுடியாது, இன்னும் 10 நாட்களுக்கு அவர் ஓய்வு எடுக்க வேண்டும்; இங்கேயே அவர் இருக்கட்டும் அவருக்குத் தேவையான பந்தோபஸ்து ஏற்பாடுகளைச் செய்து கொடுங்கள் என்று டாக்டர் சொன்னர்

76