பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடனே டாக்டருடைய யோசனையை ஏற்றுத் தேவையான போலீஸ் ப ைடக ளை நிறுத்தி விட்டு அவர்கள் போய்

விட்டார்கள்.

நகரில் முக்கியமான இடத்தில் கிளினிக் இருப்பதால் எனக்குக் காவல் இருந்த போலீஸ் படையின் நடைமுறை அந்த வட்டாரத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு நாட்கள் கழித்து மதுரை காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்த திரு. ராஜசேகர்நாயர் அவர்கள் திடீரென ஒரு புதிய உத்தரவை போட்டார். அதன்படி அரசினர் மருத்துவமனைக்கு நான் மாற்றப்பட்டேன், மிசாவின் கொடுமை ஆரம்பமானது.

என் மனைவி, மக்கள் என்னைப் பார்ப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 12 நாள் நான் அரசினர் மருத்துவமனையில் இருந்தேன். -

பிறகு நானகவே என்னைச் சிறைக்குக் கொண்டுபோய் விடுங்கள் என்று அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டு ஜனவரி மாதம் கடைசியில் நான் மதுரை சிறைக்குப்போய் விட்ட்ேன். ஏற்கெனவே கைது செய்யப்பட்ட எனது ந ண் ப ர் க ள் முன்கூட்டியே சிறைச்சாலைக்குப் போய் இருந்தார்கள். சுமார் எண்பதுபேர் மதுரைச் சிறைச்சாலையில் மிசாக் கைதியாக இருந்தோம். மிசா என்றால் கொடியவர்களை வதைக்கும் சட்டம் என்ற நினைப்பு அதிகாரிகளுக்கு இருந்தது. ஆதலால் அவர்கள் முதலில் எங்களைச் சரியாகக் கவனிக்கவில்லை. சராசரி வசதிகள் கூட எங்களுக்கு மறுக்கப்பட்டது. துர்க்குத் தண்டனைக் கைதிகளை அடைக்கும் அறையில் எங்களே அடைத்து வைத்தார்கள். அறைகளில் விளக்குகள்கூட இல்லை. சிங்கம், புலிகளைப்போல் நாங்கள் நடத்தப்பட்டோம். நான் உடல் நலம் இல்லாததால் உப்பில்லாத கஞ்சியைச் சாப்பிட்டு விட்டு உடல் நலத்தைப் பேணிக் காப்பாற்றிக் கொண்டு இருந்தேன். . . . . . .

எங்களுக்கு என்று ஒரு தனி இடத்தைப் பிரித்துக் கொடுப்பு தற்காகச் சிறைக்கண்காணிப்பாளர் திரு. பெருமாள் தேவர் அவர்கள் மெத்தவும், சிரமப்பட்டு சிறைக்குள்ளேயே ஒரு சிறை யாகயிருக்கும் 9-ம் பிளாக்குக்கு அனுப்பி வைத்தார். நாங்கள் 9ம் பிளாக்கில் ஒரு குடும்பமாக, எண்பது பேரும் நாட்களைக் கடத்திவந்தோம். - - - - - - -

ஒவ்வொரு நாளும் மத்திய, மாநில போலிஸ் அதிகாரிகள் எங்களைப் பார்ப்பதற்காகவும், எங்களுக்குள் குழப்பங்கள் உண்டாக்குவதற்காகவும் முயற்சி எடுத் து வந்தார்கள்.

77