பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு இலட்சியத்திற்காகச் சிறை வாழ்வை ஏற்றவர் என் பது எவ்வளவு பெருமைவுணர்வைத் தந்தாலும், நாற்புறமும் உயர்ந்து நிற்கும் சுவர்களிடையில் - கொட்டடியில் அடைக்கப் பட்டுள்ள கைதி என்று உணரும்போது எப்படிப்பட்ட அலை மோதும் உணர்ச்சிக்கு ஆளாக நேரிடுகிறது என்பதை இந்தச் சித்திரம் புலப்படுத்தும். ஒரு வ ைக யி ல் அதுவேதான் கொள்கை உரம் ஏறுதற்குக் காரணமாகின்றதோ என்று நான் எண்ணுகிறேன்.

தி. மு. கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லையாலுைம் அறப்போராட்டத்தில் சிறையில் வதையும் நிலை வாய்த்தாலும், அதனை இலட்சியப் பணி என்று ஏற்று அயராது நடைபோட்ட வர் என்பதற்கு இந்த ஏடே சான்று. - -

எந்த ஒரு கருத்தையும் எளிதாக மனங்கொள்ளுமாறு, சுருங்கிய சொற்களால் பளிச்சென வரைவது அவரது இயல் பான நடை. படிக்கின்ருேம் என்ற எண்ணமின்றியே படிப் பவர் அவரது ஏட்டில் திளைப்பர். நமது இயக்கக்தின் முன் னணியினர், கழக இலட்சியம் வெற்றி பெற, அண்ணுவின் அடிச்சுவட்டில் நடைபோட்டு, ஏற்றுள்ள இழப்பு - தாங்கிக் கொண்ட துன்பம், பட்ட துயரம், கொட்டிய குருதி, சிந்திய கண்ணிர், உயிர் பறிக்கப்பட்ட உடன்பிறப்புக்கள் ஆம் - நாம் தந்துள்ள விலை - விலையா; அல்ல; செய்துள்ள தியாகம் - ஆகியவற்றின் சில காட்சிகளைத் தென்னரசு அவர்கள் படமாக் கியுள்ளார். -

இன்றைய இளைய தலைமுறையினர் - எனது அ ரு ைம இளைஞரணித் தம்பிமார்கள் இந்த ஏட்டினைப் படித்திடவேண்டும் படிப்போர் நமது கழகத்தின் இலட்சியத்தின் அருமையைத் தெளிவர். அந்தத் தெளிவே இளைஞர்களைக் கொள்கை உறுதி வாய்ந்தவர்களாக - வீறு நடை போடச் செய்யும்.

தமிழ் மொழி - பண்பாடு . கலை - நாகரிகம் - த மி ழி ன வாழ்வு - மாநிலத் தன்னாட்சி உரிமை ஆகியவற்றைக் காக்க வும் - நிலைநாட்டவும் அடுத்த தலைமுறையும் தொடரவேண்டிய பணியன்றோ நமது இயக்கப்பணி; அந்தப்பணிக்குத் தயாராக வேண்டிய இளைஞர்களுக்கு, இந்த நூல் எழுச்சியூட்டும் என் பது என் நம்பிக்கை. -

இந்த ஏட்டில் நிறைந்துள்ள நண்பர் தென்னரசு அவர், கட்கும் என் வாழ்த்துக்கள். வெளியிட்டுள்ள திருமாறன் பதிப்ப்கத்தாருக்கும் எனது பாராட்டு.

  • * -- அன்பன்

க. அன்பழகன் (கல்வி அமைச்சர்),